தமிழுக்கு வருகிறார் அனு சித்தாரா

மலையாள நடிகை அனு சித்தாரா, அமீரா படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆகிறார். ஆர்.கே.சுரேஷ், சீமான், எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, ஜெயக்குமார், வினோதினி நடிக்கின்றனர். டூலெட் படத்தின் இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான செழியன் ஒளிப்பதிவு செய்கிறார். விஷால் சந்திரசேகர்  இசை அமைக்கிறார். சீமான் உதவியாளர் சுப்பிரமணியன்

இயக்குகிறார். அவர் கூறுகையில், ‘அமீரா என்றால், இளவரசி என்று அர்த்தம். இஸ்லாமிய பெண்ணை சுற்றி நடக்கும் பிரச்னைகள் பற்றிய கதை என்பதால், அமீரா என பெயர்சூட்டியுள்ளோம். கேரளாவில் ‘சிங்கிள் டேக் நடிகை’ என சொல்லப்படுகின்ற அனு சித்தாரா, பெரும்பாலான காட்சியில் தன்னுடைய கண்களாலேயே பேசி நடித்து அசத்தினார்’ என்று சொன்னார்.

Tags : Anu Siddhara ,
× RELATED தமிழகம் முழுவதும் ஜெயலலிதா...