×

கடலில் மூழ்கி டென்ஷனுக்கு முழுக்கு; ரகுல் புதுயுக்தி

நம்பர் ஒன் இடத்தை பிடிப்பதில் நடிகைகளுக்கிடையே போட்டி நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு நம்பர் ஒன் என்றால் அது நயன்தாரா தான் என்ற நிலையிருக்கும் போது அவருக்கும் சமீபத்தில் வெளியான 3 படங்கள் தோல்வியாக அமைந்து அவரது நம்பர் ஒன் அந்தஸ்தை ஆட்டிப்பார்த்திருக்கிறது. நம்பர் ஒன் இடத்தை நோக்கி ஓடிக்கொண்டிருந்த ஹீரோயின்களில் ரகுல் ப்ரீத்தும் இருந்தார்.

தொட்டு விடும் தூரம்தான் என்று அந்த இடத்தை நெருங்கி வந்து கொண்டிருந்தவருக்கு அடுத்தடுத்து அவர் நடித்த படங்கள் தோல்வியானதால் அவரது ஆசையும் நிராசையாகப் போனது. நம்பர் ஒன் இடம் கைநழுவிப் போனதால் கோபமும், ஆத்திரமும் அவரை டென்ஷனில் ஆழ்த்தியது. பெட்டி படுக்கையுடன் டென்ஷனையும் மூட்டைக்கட்டிக் கொண்டு ஸ்பெயினுக்கு பறந்தார்.

ஸ்டார் ஓட்டலில் தங்கியவர், ஃப்ரஸ் மூடுக்கு வந்து மனபாரங்களை குறைப்பதுபோல் ஆடைகளை குறைத்து டூபீஸ் உடைக்கு மாறினார். பிறகு கடற்கரை பகுதிக்கு சென்று கடலுக்குள் டைவ் அடித்து நீந்தினார். கடல் நீரில் மூழ்கிய வேகத்தில் டென்ஷனையும் மறந்தார். தனது ஆனந்த குளிய லை டூ பீஸ் தோற்றத்திலேயே புகைப்படங்களாக எடுத்து நெட்டில் பகிர்ந்த துடன், ‘மேலே வானம் கீழே பூமி மனதுக்கள் அமைதி’ என்று தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார்.

Tags :
× RELATED நெவர் எஸ்கேப் விமர்சனம்