×

பெண் இயக்குனரின் கதையில் அனுமோல்

சென்னை: ஜெ ஸ்டுடியோ சார்பில் ஜேசு சுந்தரமாறன் தயாரித்துள்ள ‘காயல்’ என்ற படத்தில் லிங்கேஷ், அனுமோல், காயத்ரி, ஸ்வாகதா, ரமேஷ் திலக், ஐசக் நடித்துள்ளனர். எழுத்தாளர் தமயந்தி இயக்கியுள்ளார். ஜஸ்டின் கெனன்யா இசை அமைத்துள்ளார். படம் குறித்து தமயந்தி கூறுகையில், ‘என் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை மையமாக வைத்து கதை எழுதியுள்ளேன்’ என்றார்.

அனுமோல் கூறும்போது, ‘தயாரிப்பாளரை முடிவு செய்வதற்கு முன்பே இக்கதையை தமயந்தி என்னிடம் சொல்லி விட்டார். அப்போது நான் மலையாளத்தில் பிசியாக இருந்தேன். எனினும், இதில் நான் நடிக்கிறேன் என்று வாக்கு கொடுத்தேன். இப்போது அதை நிறைவேற்றியுள்ளேன். கடற்கரை பகுதிகளில் நடந்த படப்பிடிப்பில் பங்கேற்றது புது அனுபவமாக இருந்தது.  அதாவது, ஒரு பயணத்தை மேற்கொள்ளும் அனுபவத்தை கொடுத்தது. பெண்களின் மனதில் இருக்கும் இன்னொரு பக்கத்தை துணிந்து சொல்லியிருக்கும் இயக்குனர் தமயந்திக்கு எனது பாராட்டுகள்’ என்றார்.

Tags : Anumol ,Chennai ,Lingesh ,Gayathri ,Swagata ,Ramesh Thilak ,Isaac ,Jesu Sundaramaran ,J Studio ,Damayanthi ,Justin Kenanya ,
× RELATED நடிகர் சுஷாந்துடன் காதலா? மீனாட்சி சவுத்ரி பதில்