×

அமைராவின் தேவதை யார்?

அநேகன் படத்தில் காந்தப்பார்வையில் சுண்டி இழுத்து இளவட்டங்களை வளைத்துப்போட்டார் அமைரா தஸ்தூர். மறுஜென்ம காதல் கதையாக உருவான இப்படத்தில் வெவ்வேறு ஜென்மங்களில் தனுஷுடன் இணையும் காதலியாக நடித்தார். ஆனால் அவருக்கு நேரம் சரியில்லைபோல... ஒரு படத்தோடு பாலிவுட்டுக்கு திரும்பினார். இந்தியில் நடித்துவந்த அமைராவுக்கு அதிர்ஷ்டவசமாக ஜாக்கிசான் உடன், ‘குங்ஃபு யோகா’ ஆங்கில படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

4 வருடமாக தென்னிந்திய பட வாய்ப்புக்காக முயற்சித்தவருக்கு சந்தானம் ஜோடியாக ஓடி ஓடி உழைக்கணும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவே ஏற்றுக்கொண்டார். ரசிகர்கள் சிலர், ‘அமைரா ஒரு அழகு தேவதை’ என வர்ணித்தனர். புகழுக்கு மயங்காதவர்கள் இல்லை என்றாலும் அமைராவிடம் அது எடுபட வில்லை.

வீட்டில் தான் வளர்க்கும் நாய் ஒன்றை கட்டிப்பிடித்து தரையில் படுத்திருக்கும் புகைப் படத்தை வெளியிட்டவர், ‘ஒவ்வொருவரும் தேவதைக்கு இறக்கைகள் இருப்பதாக எண்ணுகிறார்கள். அதிர்ஷ்டசாலியான என்னை போன்றவர்களுக்குத்தான் அத்தகைய தேவதைகளுக்கு மயிர்க் கால்களும், 4 பாதங்களுமே இருக்கிறது என்பது தெரியும்’ என தனது நாயை தேவதையாக வர்ணித்திருக்கிறார் அமைரா.

Tags :
× RELATED மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்