தயாரிப்பாளரான சனம் ஷெட்டி

நடிகை சனம் ஷெட்டி தயாரித்து நடிக்கும் படம், மேகி. தர்ஷன், பாண்டியராஜன், ரமேஷ் திலக், கருணாகரன் நடிக்கின்றனர். இயக்கம், ஜி.ராதாகிருஷ்ணன். படம் குறித்து சனம் ஷெட்டி கூறியதாவது: அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த படம் என்பதால் நானே தயாரிப்பாளரானேன். விளம்பர ஷூட்டிங்கில் தர்ஷனை பார்த்தேன். அங்கிருந்த சிலர், பார்ப்பதற்கு தர்ஷன் ஹீரோ மாதிரி இருக்கிறார் என்றார்கள். உடனே அவரை ஆடிஷனுக்கு வரவழைத்து தேர்வு செய்தேன்.  

எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். மேகாலயாவில் படப்பிடிப்பு நடத்தினோம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 14 படங்களில் நடித்துள்ளேன். வெற்றிகரமான தயாரிப்பாளராக வேண்டும் என்றால், பல தடைகளை உடைக்க வேண்டும் என்ற அனுபவம் கிடைத்தது. தொடர்ந்து படம் தயாரிப்பேன். தவிர, எதிர்வினை ஆற்று என்ற படத்திலும் நடிக்கிறேன்.

Tags :
× RELATED ஆக்‌ஷனுடன் கிளுகிளுப்பு!