×

பாலிவுட்டில் நித்யாமேனன்

தமிழில் கடைசியாக மெர்சல் படத்தில் நடித்தார், நித்யாமேனன். தமிழில் தி அயர்ன் லேடி படத்தில், ஜெயலலிதா வேடத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில், அவர் முதல் முறையாக நடித்த இந்தி படம் அடுத்த மாதம் வெளியாகிறது. மிஷன் மங்கள் என்ற இந்த படம், மங்கள்யான் சாதனையை சொல்லும் படமாக உருவாகியுள்ளது.

விஞ்ஞானி வேடத்தில் அக்‌ஷய் குமார், வித்யா பாலனுடன் இணைந்து நித்யாமேனன் விஞ்ஞானியாக நடித்து இருக்கிறார். தமிழகத்தை சேர்ந்த பாலிவுட் டைரக்டர் பால்கி இந்த படத்தை தயாரித்துள்ளார்.

Tags :
× RELATED மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்