×

அடல்ட் படம் வேண்டாம்; அலறும் விமல்

காமெடி கதை படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நடிப்பவர், விமல். இதனால் பேமிலி ஆடியன்ஸ் மத்தியில் நல்ல பெயர் கிடைக்கும் என்று அவர் நம்புகிறார். இதற்கிடையில், ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தை போல், இனி எந்த படத்திலும் நடிக்க மாட்டேன். அது அடல்ட் காமெடி படம்.

அதில் நடித்ததால் நிறைய பாடம் கற்றுக்கொண்டேன். அந்த படம் உருவானதும், தலைப்பு வைக்கப்பட்டதும் என்னை மீறி நடந்த விஷயங்கள்’ என்றார் விமல். அடுத்து கன்னிராசி படத்தில் வரலட்சுமியுடன் நடிக்கிறார். சண்டகாரி படத்தில் ஸ்ரேயா ஜோடியாகிறார். பெயரிடப்படாத இன்னொரு படத்திலும் நடிக்க உள்ளார்.

Tags :
× RELATED நெவர் எஸ்கேப் விமர்சனம்