×

சிம்ரன் மாதிரி இந்துஜா; ஹீரோ சர்ட்டிபிகேட்

ஆண்மை தவறேல் துருவா, இந்துஜா நடித்துள்ள படம், சூப்பர் டூப்பர். இயக்கம், அருண் கார்த்திக். படம் குறித்து துருவா பேசும்போது, ‘டைரக்டர்,  ஒன்மேன் ஷோவாக இருந்து படத்தில் பல புதுமைகளை செய்திருக்கிறார். 1990களில் சிம்ரன் நடித்தது போல் கவர்ச்சியாகவும், திறமையாகவும்  நடித்துள்ளார் இந்துஜா.

இது அவருக்கு மிகவும் வித்தியாசமான படமாக  இருக்கும். ஷாரா, ஆதித்யா ஆகியோருக்கும் வலுவான கேரக்டர் கிடைத்துள்ளது. ஆண்மை தவறேல் படம் ரசிகர்களிடம் என்னை நன்றாக அடையாளப்படுத்தியது. அதுபோல்,  சூப்பர் டூப்பர் படம் என்னை வழிநடத்தி செல்ல உதவும்’  என்றார்.

Tags :
× RELATED ரசவாதி – தி அல்கெமிஸ்ட் – திரைவிமர்சனம்