ரசிகர்களுக்கு கட்டிப்பிடித்து முத்தம் தருவது ஏன்? விஜய் சேதுபதி விளக்கம்

வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தில் சோகமாக இருப்பவர்களை கட்டிப்பிடி வைத்தியம் செய்து ஆறுதல் சொல்வார் கமல்ஹாசன். சினிமாவில் கமல் செய்ததை நிஜத்தில் செய்துக்கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. கட்டிப்பிடி வைத்தியத்துடன் போனஸாக முத்தமும் தருகிறார். தன்னை தேடி வரும் ரசிகர்கள் மற்றும் மிகவும் பிடித்த நண்பர்களை கட்டிப் பிடித்து முத்தம் தருகிறார் விஜய்சேதுபதி. வழக்கமாக பிடித்தமான ஹீரோக்களுடன் கைகுலுக் கினாலே ஆனந்தத்தில் மிதக்கும் ரசிகர்கள் கட்டிப்பிடித்து முத்தம் கிடைத்தால் எவ்வளவு ஆனந்தமடைவார்கள்.

ரசிகர்களை அணுகுவதில் நடிகர்களிலேயே இவர் கொஞ்சம் வித்தியாசமானவராக இருக்கிறாரே. என்று கேட்டவர்களுக்கு சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் விளக்கம் அளித்த விஜய்சேதுபதி,’ரசிகர்களில் யார் ஒருவரையும் நான் அவர்களது தோற்றத்தை வைத்து பிரித்துப்பார்ப்பதில்லை. அவர்களிடமிருந்து நான் அளவுகடந்த அன்பை பெற்றிருக்கிறேன். கட்டிபிடித்து முத்தம் தருவது எப்போது தொடங்கியதென்பதை சொன்னால் அது புரியும்.

நான் சினிமாவுக்கு வந்த ஆரம்ப கால கட்டங்களில் 2 ரசிகர்கள் என்னை முத்தமிடவும், கட்டிப்பிடிக்கவும் கேட்டனர். அவர்கள் எண்ணத்தை நான் நிறைவேற்றினேன். அந்த புகைப்படத்தை இணைய தளத்தில் அவர்கள் வெளியிட்டு வைரலாக்கி விட்டார்கள். அன்று முதல் தான் ரசிகர்களை கட்டிப்பிடித்து முத்தம் தருகிறேன். இதை தரவேண்டும் என்ற ஆர்வத்தில் செய்யவில்லை. இயற்கையாகவே எனக்கு அது பழக்கத்தில் வந்துவிட்டது’ என்றார்.

Tags :
× RELATED சாப்பாடு கதையில் சந்தானம்