சேட்டை பொண்ணு.... காஜல் அகர்வால்

விஜய், அஜீத் என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்ட காஜல் அகர்வால் கமலுடன் இந்தியன் 2ம் பாகத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். சில நாள் படப்பிடிப்பு நடந்தநிலையில் அப்படம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இயக்குனருக்கும், பட நிறுவனத்துக்கும் ஏற்பட்ட பிரச்னை காரணமாக படப் பிடிப்பு தொடராமல் இருக்கிறது. அப்படத்தின் படப்பிடிப்புக்காக காஜலும் ஆவலாக காத்திருக்கிறார்.

ஏற்கனவே பாரிஸ் பாரிஸ் படத்தில் காஜல் நடித்திருந் தாலும் அப்படம் ரிலீஸ் ஆகாமல் முடங்கிக்கிடக்கிறது. சமீபத்தில் அவர் நடித்த சிடா தெலுங்கு படம் எதிர்பார்த்த வெற்றி ஈட்டாததால் அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

படம் வெற்றியோ, தோல்வியோ என்னுடைய சேட்டை குறையாது என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார் காஜல். நீச்சல் தொட்டியில் தண்ணீரை குறைவாக நிரப்பி அதில் இறங்கி தண்ணீரை தட்டிவிட்டு ஸ்டைலாக நடப்பதுபோல் ஒரு படத்தை ரசிகர்களுக்காக வெளியிட்டு இது எப்படி இருக்கு என்று உற்சாக துள்ளளுடன் கேட்டு சேட்டை செய்திருக்கிறார் காஜல் அகர்வால்.

Tags :
× RELATED செல்பி எடுக்க முயன்ற ரசிகர்; செல்போனை பிடுங்கி சென்ற சல்மான் கான்