ஒரு படத்தோடு ஒதுங்க முடிவு?

சாஹோ படத்தில் கதாநாயகியாக நடிக்கும் ஷ்ரத்தா கபூர், இதையடுத்து பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் வாழ்க்கை சரித்திர படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார். அதற்கான பயிற்சிகளும் மேற்கொண்டார். திடீரென்று அப்படத்திலிருந்து விலகி விட்டார். மும்பையில் இருந்து வந்த தமன்னா, காஜல் அகர்வால்போல் ஷ்ரத்தாவும் தமிழ் திரையுலகில் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புதிய படங்களில் நடிக்க வரும் வாய்ப்புகளை ஏற்காமல் விலகிச் செல்கிறார்.

முதல்படம் வெளியான பிறகு சம்பளத்தை அதிகரித்து கேட்கவே தற்போது படங்களை ஏற்காமலிருக்கிறார் என்று பேசப்பட்டாலும் அவரோ நடிப்பிலிருந்து ஒதுங்க முடிவு செய்திருப்பதாக தகவல் கசிகிறது.

பாலிவுட் இயக்குனர் ஃபரான் அக்தர் உடன் காதலில் ஈடுபட்டு வந்த ஷ்ரத்தாவுக்கு திடீரென்று அவருடன் பிரேக் அப் ஆனது. தற்போது தனது நெருக்கமான பாய்பிரண்ட் ரோஹன் ஷ்ரெஷ்தாவுடன் காதல் வயப்பட்டிருக்கிறாராம். அடுத்த ஆண்டு அவரை மணக்க எண்ணியுள்ளதாலேயே புதிய படங்களை ஏற்காமல் ஷ்ரத்தா ஒதுங்கி செல்கிறாராம்.

× RELATED கமல் படத்திலிருந்து வெளியேறிய நடிகை