×

இந்தியா - ஜப்பான் தயாரிப்பில் உருவாகும் படத்தில் பிரியா ஆனந்த்

சிவா, பிரியா ஆனந்த், யோஷினோரி தஷிரோ (சுமோ), விடிவி கணேஷ், யோகி பாபு நடிக்கும் படம், சுமோ (மல்யுத்த வீரர்). ஒளிப்பதிவு, ராஜீவ் மேனன். இசை, நிவாஸ் கே.பிரசன்னா. திரைக்கதை, வசனம்: சிவா. இயக்கம், ஹோசிமின். படம் குறித்து அவர் கூறியதாவது: இப்படம் இந்தியா-ஜப்பான் கூட்டுத்தயாரிப்பு. ஜப்பானில் 35 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அங்கு பாடல்களை படமாக்குவது சுலபம் அல்ல. அந்நாட்டு அரசாங்கமும், தூதரகமும் உதவி  செய்ததால், பிரச்னை இல்லாமல் படப்பிடிப்பு நடத்தினோம்.

சுமோக்களின் வாழ்க்கையை படமாக்கிய முதல் இந்திய படம் இது. சுமோக்களின் வாழ்க்கை 40 முதல் 45 வயது வரை. இதில் 18 சுமோக்கள் நடித்துள்ளனர். காமெடி மற்றும் சென்டிமென்ட் கலந்த கதையை கேட்ட ராஜீவ் மேனன், உடனே ஒளிப்பதிவு செய்ய ஒப்புக்கொண்டார். உலகில் அன்புதான் மிகவும் வலிமையானது என்பதை சொல்கிறோம். சிவா திரைக்கதை, வசனம் எழுதியுள்ளது கூடுதல் சிறப்பு. பிப்ரவரி 14, ஆயிரம் விளக்கு ஆகிய படங்களுக்கு பிறகு நான் இயக்கும் படம் இது.

Tags :
× RELATED வரலட்சுமியின் பான் இந்தியா படம் மே 3ம் தேதி ரிலீஸ்