×

யாஷிகாவுக்கு ஃபாய்பிரண்ட் லிப் டு லிப் கிஸ்

இருட்டறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து பிரபலமானவர் யாஷிகா. அதேபோல் பாயும்புலி, அச்சாரம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படங்களில் நடித்திருப்பவர் ஐஸ்வர்யா தத்தா. இவர்கள் இருவரும் நெருங்கிய தோழிகளாக இருக்கின்றனர். நெருக்கமென்றால் இருவரும் கட்டிப்பிடித்து உதட்டுமுத்தம் பகிர்ந்துகொள்ளும் அளவுக்கு நெருக்கம். இவர்கள் இருவரும் அருகருகே நின்று பேசிக்கொண்டிருப்பதுபோன்ற செல்பி வீடியோ வெளியிட்டுள்ளனர்.

ஐஸ்வர்யா பேசப் பேச யாஷிகா வெட்கப்பட்டு அவர் தோள் மீது அடிக்கடி சாய்ந்துகொள்கிறார். சில நிமிடங்கள் ஒடும் இந்த வீடியோவில் திடீரென்று குறுக்கே தாடி வைத்த ஒரு வாலிபர் புகுந்து யாஷிகாவுக்கு உதட்டு முத்தம் அளித்து சர்ப்ரைஸ் தருகிறார். யாஷிகாவுக்கு லிப் டு லிப் கிஸ் கொடுத்த அந்த நபர் யார் என்று ரசிகர்கள் கேட்ட வண்ணமிருந்தனர். அநேகமாக அவர் யாஷிகாவின் பாய்பிரண்டாக இருக்கலாம் என்று தெரிகிறது.

Tags :
× RELATED வரலட்சுமியின் பான் இந்தியா படம் மே 3ம் தேதி ரிலீஸ்