×

கிச்சா பெயர் வந்தது எப்படி? கிச்சா சுதீப் சுவாரஸ்ய தகவல்

சென்னை: கன்னடத்தில் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முகம் கொண்டவர் கிச்சா சுதீப். ‘நான் ஈ’ படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியிலும் பிரபலமானார். தற்போது இந்தி, கன்னடம் என மாறி மாறி நடித்து வருகிறார். சமீபத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் இவர் நடித்த ‘மேக்ஸ்’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. இவரது படங்களின் டைட்டிலில் இவர் பெயர் கிச்சா சுதீப் என்றுதான் குறிப்பிடப்பட்டிருக்கும். இன்றுவரை அது அவருடைய பெயர்தான் என்று பலரும் நினைத்து கொண்டிருப்பார்கள். ஆனால் கிச்சா சுதீப்பின் உண்மையான பெயர் சுதீப் சஞ்சீவ். இவரது பெயருக்கு முன்னாள் கிச்சா என்ற பெயர் எப்படி வந்தது என்ற சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

கன்னட திரையுலகில் வாய்ப்புகளுக்காக போராடி வந்த சுதீப்புக்கு தமிழில் விக்ரம் நடித்த ‘சேது’ படத்தின் கன்னட ரீமேக்கில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ‘சேது’ படத்தில் விக்ரமுக்கு ‘சீயான்’ என்கிற ஒரு அடைமொழியை வைத்து பின்னர் அதுவே அவரது ரசிகர்கள் அவரை அழைக்கும் பெயராக மாறியது. அதேபோல சுதீப்புக்கும் ‘சேது’ ரீமேக் படத்தில் ‘கிச்சா’ என்கிற பெயரை வைத்து, படம் வெளியான பிறகு ரசிகர்கள் அனைவரும் அவரை ‘கிச்சா’ என்கிற பெயரிலேயே அழைக்க ஆரம்பித்தனர். தன் முதல் பட வெற்றிக்கு காரணமான பெயர் என்பதால் சென்டிமெண்ட்டாக இருக்க வேண்டும் என தன்னுடைய பெயருடன் அதை இன்றுவரை சேர்த்து வைத்துள்ளார் கிச்சா சுதீப்.

 

Tags : Kiccha ,Kiccha Sudeep ,Chennai ,Kalaipuli S. Thanu ,
× RELATED நடிகர் சுஷாந்துடன் காதலா? மீனாட்சி சவுத்ரி பதில்