மும்பை: தமிழ், தெலுங்கில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்து வெளிவந்த திரைப்படம் ‘சீதா ராமம்’. இப்படத்தில் கதாநாயகியாக நடித்து ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தவர் நடிகை மிருணாள் தாக்கூர். பாலிவுட் திரையுலகில் நடித்து வந்த மிருணாள் தாக்கூருக்கு ‘சீதா ராமம்’ படம் நல்ல பிரபலத்தை தென்னிந்திய சினிமாவில் ஏற்படுத்தி கொடுத்தது.
இதை தொடர்ந்து தெலுங்கில் இவர் நடிப்பில் வெளிவந்த ஹாய் நானா திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இந்நிலையில், சன் ஆஃப் சர்தார் 2 படத்தில் நடித்துள்ள மிருணாள், சமீபத்தில் தனது 33வது பிறந்தநாளையும் கொண்டாடினார். பிறந்தநாள் கழித்து அடுத்த நாளில் அப்படத்தின் ப்ரீமியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவருடனே சுற்றி வந்த ஒரு இளைஞரை பார்த்து கூட்டத்தில் யார் இவர் என சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து மிருணாளிடம் போட்டோகிராபர்கள் உங்களுடன் இருப்பவர் யார் என கேட்டுவிட்டனர். உடனே, ‘‘இவன் எனது தம்பி’’ என்று கூறி பத்திரிக்கையாளர்களிடம் அறிமுகப்படுத்தினார் மிருணாள் தாக்கூர்.
