×

சமீரா ரெட்டி ஹேப்பி...!

சமீரா ரெட்டியை யாரும் மறந்திருக்க முடியாது. கவுதம் மேனனின் வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர். வெடி, வேட்டை என பல படங்களில் நடித்திருந்தார். 6 வருடங்களுக்கு முன் நடிப்புக்கு முழுக்குபோட்டு அக்‌ஷய் வர்தே என்ற தொழில் அதிபரை மணந்தார். சமீராவுக்கு ஆண் குழந்தை உள்ளது. தற்போது மீண்டும் கர்ப்பமாகியிருக்கிறார்.

கடந்த சில மாதங்களாக ஷமீரா தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை நெட்டில் பகிர்ந்து வருவதுடன் கர்ப்பமான தோற்றத்துடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அதைப்பார்த்த நெட்டிஸன்கள் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை ஏன் வெளியிடுகிறீர்கள் என்று சகட்டு மேனிக்கு அவரையும், அவரது தோற்றத்தையும் நக்கலடித்து வந்தனர். அதற்கெல்லாம் பயந்துவிடாமல் தன்னை கிண்டலடித்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து விதவிதமான கர்ப்பிணி தோற்ற புகைப்படங்களை வெளியிட்டு நக்கலடித்தவர்களை மேலும் கடுப்பேற்றினார்.

தனது தோற்றத்தை பரிகாசம் செய்து கொண்டிருந்தவர்களின் வசை மொழிகளை மறந்து வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார் சமீரா. குடும்பத்தினர் சமீராவுக்கு கைநிறைய வளையல்கள் அணிவித்தும், இனிப்பு வழங்கியும் நிகழ்ச்சியை கொண்டாடினார்கள். அதில் ஹேப்பி மூடுக்கு சென்ற சமீரா வளைகாப்பு படங்களை நெட்டில் பகிர்ந்துள்ளார்.

Tags :
× RELATED ‘பார்க்கிங்’ படம் பாணியில் கவனம்...