![]()
சென்னை: ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படமான ‘‘மதராஸி’’ படத்திலிருந்து முதல் பாடலான “சலம்பல” பாடலை ஜங்கிலீ மியூசிக் வெளியிட்டுள்ளது. அனிருத் இசையமைத்த இந்தப் பாடல், இந்த ஜோடியின் 8வது படத்தில், ரசிகர்களின் ஃபேவரைட்டாக வெளியாகியுள்ளது. துடிப்பான குரல் மற்றும் பன்முக வித்தகராக, வளர்ந்து வரும் இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தனது குரலில், துடிதுடிப்பான “சலம்பல” பாடலை பாடியுள்ளார்.
அனிருத் கூறுகையில், ‘‘நாங்கள் வழக்கமான பிரேக்அப் பாடல் மனநிலையிலிருந்து விடுபட்டு ‘‘சலம்பல” பாடலை, மாறுபட்ட பாடலாக உருவாக்க விரும்பினோம். இது வித்தியாசமான, கணிக்க முடியாத பாடலாக இருக்கும், மேலும் எஸ்.கே. உடன் இணைவது எப்போதும் மிரட்டலான ஒன்றாக இருக்கும். இயக்குநர் முருகதாஸின் தொலைநோக்குப் பார்வை மிகத் தெளிவாக இருந்தது’’ என்றார்.
