ஸ்டார் ஹீரோக்கள் தண்ணி கொடுங்க... ஸ்டண்ட் மாஸ்டர் கெஞ்சல்

சமீபத்தில் சென்னையில் நடந்த 2 திரைப்பட விழாக்களில் திரைப்பட கில்டு தலைவரும், ஸ்டண்ட் மாஸ்டருமான ஜாகுவார் தங்கம் கலந்துகொண்டு ஸ்டார் நடிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.. தண்ணீர் இல்லாமல் மக்கள் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். ஓட்டல்கள், விடுதிகளை மூடும் நிலை உருவாகியிருக்கிறது. அரசு ஒரு பக்கம் தண்ணீர் பிரச்னை தீர்க்க முயன்று வருகிறது.

அரசால் மட்டுமே இதை செய்துவிட முடியுமா என்பது தெரியவில்லை. கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் சூப்பர் ஸ்டார் நடிகர்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு ஒரு நகரத்தை அல்லது கிராமத்தை தத்தெடுத்து அங்குள்ள மக்களுக்கு தண்ணீரை விலைக்கு வாங்கி தர முன் வரவேண்டும். ரசிகர்கள் நடிகர்களின் கட்டவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்கிறார்கள்.

இந்த நேரத்தில் அவர்களின தாகம் தீர்க்க நடிகர்கள் தண்ணீர் கொடுங்கள் என்று கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன். அமிதாப்பச்சன் வட மாநிலத்தில் உள்ள விவசாயிகளின் வங்கி கடனை கோடிக்கணக்கில் தனது சொந்த பணத்தில் அடைத்திருக்கிறார். போகும்போது எதுவும் கூடவரப் போவதில்லை என்பதை அவர் உணர்ந்து இந்த உதவி செய்திருக்கிறார். அதேபோல் இங்குள்ள ஸ்டார் நடிகர்களும் மக்களுக்கு உதவ வேண்டும். அப்போதுதான் நீங்கள் மீண்டும் அவர்களை சந்திக்க முடியும்’ என்றார்.

Tags : heroes ,Stunt Master Kennel ,
× RELATED ஹீரோக்களை விட ஹீரோயின்களுக்கு அதிக கஷ்டம்; சமந்தா கணிப்பு