தும்பாவில் கெஸ்ட் ரோல்

அடங்க மறு படத்துக்கு பிறகு ஜெயம் ரவி நடிப்பில் கோமாளி ரிலீசாக உள்ளது. இதற்கிடையே தும்பா என்ற படத்தில் கவுரவ வேடத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கிறார். ஹரிஷ் ராம் இயக்கத்தில் தர்ஷன், கீர்த்தி பாண்டியன் நடித்துள்ள படம் தும்பா. காடுகளில் படமாக்கியுள்ள இந்த படத்தில் மிருகங்கள் முக்கிய வேடங்களில் வருகின்றன.

பெரும்பாலான இந்த காட்சிகள் கிராபிக்ஸ் மூலம் படமாக்கியுள்ளனர். ‘படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்க கேட்டதும் மற்ற படங்களில் நடித்து வந்தாலும் மறுப்பு சொல்லாமல் ஜெயம் ரவி நடித்தார். அது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது’ என படக்குழு தெரிவித்துள்ளது.

× RELATED தமிழில் மீண்டும் நடிக்கிறார் ஸ்ரேயா