இந்தி பட ரீமேக்கில் ஹரிஷ் கல்யாண்

இந்தியில் வெளியான விக்கி டோனர் படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார் ஹரிஷ் கல்யாண். இந்த படத்துக்கு தாராள பிரபு என தலைப்பிட்டுள்ளனர். கிருஷ்ணா மாரிமுத்து இயக்குகிறார். இந்தியில் ஆயுஷ்மான் குரானா ஹீரோவாக நடித்திருந்தார். இதில் முக்கிய வேடத்தில் விவேக் நடிக்க உள்ளார். படத்தின் ஹீரோயினுக்கான தேர்வு நடக்கிறது.

சிவப்பு மஞ்சள் பச்சை படத்துக்கு பிறகு சசி இயக்கும் படத்திலும் ஹரிஷ் கல்யாண் நடிக்க உள்ளார். அந்த படம்தான் விக்கி டோனர் ரீமேக் என கூறப்பட்டது. ஆனால் அதை சசி மறுத்துள்ளார். இந்நிலையில் தாராள பிரபுதான் ரீமேக் படம் என தெரியவந்துள்ளது.

Tags : Harish Kalyan ,
× RELATED இந்தியில் இன்னிங்ஸ் தொடங்கிய கீர்த்தி