×

மேக்கப் இல்லாமல் போட்டோ எடுத்தது ஏன்? காஜல் அகர்வால்

மேக்கப் இல்லாமல் போட்டோ ஷூட் நடத்தி, அந்த போட்டோக்களை தனது சமூக வலைத்தளத்தில் துணிச்சலுடன் வெளியிட்டுள்ளார் காஜல் அகர்வால். இது குறித்து அவர் கூறுகையில், ‘இன்றைய சூழ்நிலையில் மனிதர்களால் தங்களை அடையாளம் காண முடியவில்லை. காரணம், உடல் அழகை கண்டு மயங்கும் உலகில் வாழ்வதால் இருக்கலாம்.

சமூக ஊடகங்கள் யாரை, எப்போது முன்னிலைப்படுத்துகிறது என்ற விஷயத்தில் நம் சுயமரியாதையை விழுங்கியதால் கூட இருக்கலாம். அனைவருக்கும் கச்சிதமான உடலை ஏற்படுத்திக் கொடுப்பதாக வாக்கு தரும் அழகு சாதன பொருட்கள் வாங்க, நாள்தோறும் கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்படுகிறது.

தற்பெருமையான விஷயங்களை இப்போது எல்லா இடத்திலும் பார்க்க முடிகிறது. நம்முடைய வேறொரு பிம்பத்தைப் பெற முயற்சிப்பதை விட, நமது உண்மையான முகத்தை ஏற்றுக்கொண்டால் சந்தோஷமாக இருக்க முடியும். மேக்கப் செய்வது நம் புறத்தோற்றத்தை அழகாக காட்டலாம். ஆனால், உள்ளதை உள்ளபடி ஏற்றுக்கொள்வதில் மட்டுமே உண்மையான அழகு இருக்கிறது’ என்றார்.

Tags : Kajal Agarwal ,
× RELATED அதிமுக அரசின் நிர்வாக அலங்கோலத்தை...