×

ஐஸ் தண்ணீரில் அழகு சிலை

தமன்னா டாப் ஸ்டார்களுடன் நடித்துவிட்டு இப்போது ஹீரோயின் கதை அம்சமுள்ள கதைகளில் நடிக்கிறார். முன்பெல்லாம் அடிக்கடி இணைய தள பக்கத்தில் தொடர்ச்சியாக மெசேஜ் பதிவு செய்துவந்தவர் சமீபகாலமாக எப்போதாவதுதான் தனது படங்களை வெளியிடுகிறார். நீச்சல்குளத்தில் நீச்சல் உடை அணிந்தபடி ஐஸ் தண்ணீரில் கழுத்தளவு மூழ்கியபட நிற்கும் புதிய ஸ்டில்லை வெளியிட்டிருக்கும் தமன்னா தனது கையில் ஒரு பூவை வைத்து அதன் அழகை ரசித்தபடி இருக்கிறார். ஜில்லிடும் ஐஸ் குளிர் தண்ணீரில் மிதக்கும் ஒரு அழகு சிலையாகவே தமன்னா தெரிவதாக பலரும் லைக்ஸ் கொடுத்துள்ளனர். ‘ஒருவகையில் சிறிய அழகான விஷயம்தான் வாழ்க்கையில் உண்மையானவையாக இருக்கிறது’ என்று அமெரிக்க நாவலாசிரியர் லாரா இன்கால்ஸ் வில்டெரின் வரிகளை தனது படத்துக்கு கீழே பொன்மொழியாக குறிப்பிட்டிருக்கிறார் தமன்னா.

Tags :
× RELATED மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்