டார்ச்சர் தாங்கல... பூனம் புகார்

உன்னைப்போல் ஒருவன், வெடி, பயணம், 6, என் வழி தனி வழி போன்ற பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்திருக்கும் பூனம் கவுர், ஒன்றிரண்டு ஹீரோக்கள் பற்றி விமர்சனம் செய்தார். அந்த ஹீரோக்களின் ரசிகர்கள் பூனமை கடுமையாக தாக்கி பதிலடி தருகின்றனர். பூனமை விமர்சித்து யூடியூபிலும், சமூக வலைதளங்களிலும் சர்ச்சை கருத்துக்கள் பகிரப்படுவதால் நொந்துபோன நடிகை, சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்திருக்கிறார். அதில் ‘யூ டியூபிலும், நெட்டிலும் என்னைப்பற்றி அவதூறு பரப்பி வருகின்றனர். இதனால் எனக்கு டென்ஷன் அதிகரித்திருக்கிறது. இந்த டார்ச்சரை என்னால் தாங்க முடியவில்லை. சம்பந்தப்பட்டவர்களை கண்டுபிடித்து தகுந்த தண்டனை வழங்க வேண்டும்’ என கூறி உள்ளார். ‘பெண்கள இழிவா பேசறதால சம்பந்தப்பட்டவங்களுக்கு என்ன கெடக்கப் போவுதுன்னு எனக்கு தெரியல. குறிப்பா என்னய, என்னோட தனிப்பட்ட வாழ்க்கய குறி வச்சி தாக்கறாங்க. சில பேர் மேல எனக்கு சந்தேகம் இருக்கு அவங்க மேல கடுமையா ஆக்‌ஷன் எடுக்கணும்’னு தெரிவித்திருக்கிறார் பூனம்.

× RELATED ரவீந்திர ஜடேஜா, பும்ரா, முகமது ஷமி,...