×

மர்ம மரணம் கண்டுபிடிப்பாரா சுவேதா

தலைவர்கள் சிலர் சுடப்பட்டும், மர்மமான முறையில் மரணம் தழுவியும் இறக்கின்றனர். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சுடப்பட்டு இறந்தார், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது. இதுபற்றி அடிக்கடி பேசப்பட்டாலும் முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்த்ரியின் மர்ம மரணம்பற்றி அதிகம் பேசப்பட்டதில்லை. 1965ம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் போர் முடிவுக்குபின் தாஸ்கண்ட் ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில் 1966ம் ஆண்டு வெகு விரைவில் சாஸ்த்ரி மரணம் அடைந்தார்.

தற்போது இந்த சம்பவம், ‘தி தாஸ்கண்ட் பைல்ஸ்’ பெயரில் திரைப்படமாகிறது. இப்படத்தில் ராகினி என்ற துப்பறியும் பத்திரிகையாளர் வேடத்தில் நடிக்கிறார் சுவேதா பாசு. இவர் ஏற்கனவே தமிழில் ரா ரா, ஒரு முத்தம் ஒரு யுத்தம், மெய், சந்தமாமா படங்களில் நடித்தவர். தெலுங்கு படங்களிலும் நடித்தவர் பிறகு இந்தி படங்களில் நடிக்க சென்றார். கடந்த ஆண்டு இவர் ராகுல் மிட்டல் என்பவரை மணந்துகொண்டார்.

திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்து வரும் சுவேதா, இதுபற்றி கூறும் போது, ‘நேர்மையான பத்திரிகையாளர்கள் அதிகார வர்கத்தினரால் நசுக்கப் படுகிறார்கள். அதற்கும் பயப்படாதவர்கள் திடீரென்று மாயமாகிறார்கள் அல்லது கொல்லப்படுகிறார்கள். இப்படத்தில் இணைவதற்கு முன் சாஸ்த்ரி வாழ்க்கைபற்றி எனக்கு அதிகம் தெரியாமலிருந்தது. பள்ளியில்கூட அவரைப் பற்றி அதிகம் படித்ததில்லை. இக்கால இளைஞர்கள் கேள்வி எழுப்புகிறார் கள். கேள்வி கேட்டாலொழிய நிலைமைகள் மாறாது’ என்றார்.

Tags : Mystery death ,
× RELATED இயக்குனர் மர்ம சாவு: கொரோனா பரிசோதனை...