தமிழக வீரர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம்; ரோபோ சங்கர்

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் வழங்குவதாக காமெடி நடிகர் ரோபோ சங்கர் தெரிவித்துள்ளார். ராணுவ வீரர்கள் என்றால் நான் எப்போது சொல்வது நம்மை காக்கின்ற எல்லை சாமிகள். அந்த எல்லை சாமிகள் இப்படி ஒரு தாக்குதலில் இறந்து இருக்கிறார்கள் என்கிற செய்தியை கேட்கும் போதும் பார்க்கும் போது மன வேதனையாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். பிப்ரவரி 14ம் தேதியன்று புல்வாமா மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 44 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

20க்கும் மேற்பட்ட வீரர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணி, அரியலூர்  மாவட்டத்தை சேர்ந்த சிவச்சந்திரன் என்ற 2 வீரர்கள் பலியாகினர். இந்த கொடூர தாக்குதலால் நாடு முழுவதும் மக்கள் கொந்தளித்துள்ளனர். தாக்குதல் சம்பவத்துக்கு இந்திய மற்றும் உலக நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் வழங்குவதாக காமெடி நடிகர் ரோபோ சங்கர் தெரிவித்துள்ளார்.

× RELATED கோவில்பட்டி அருகே அனுமதியை மீறி...