மோடி - மன்மோகன் வேடத்தில் நடிகர்கள் பொருத்தமான கெட்டப் யாருக்கு?

அரசியல் தலைவர்களுக்குள்போட்டி தவிர்க்க முடியாது. அந்தபோட்டி தற்போது திரையுலகம் வரையில் நீண்டிருக்கிறது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வாழ்க்கை வரலாறு, ‘தி ஆக்சிடன்ட்டல் பிரைம் மினிஸ்டர்’ பெயரில் உருவாகியிருக்கிறது. மன்மோகன் சிங் வேடத்தில் சீனியர் பாலிவுட் நடிகர் அனுபம்கெர் நடித்துள்ளார். இவர் தமிழில் விஐபி, குற்றப்பத்திரிகை, லிட்டில் ஜான் படங்களிலும் நடித்துள்ளார்.

மன்மோகன்சிங் கெட்டப்பில் அனுபம்கெர் நடித்த காட்சிகள் சமீபத்தில் இணைய தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது சர்ச்சைக்குள்ளானது. அதுபற்றிய பேச்சு முடிவுக்கு வராத நிலையில் திடீரென்று பிரதமர் மோடி வாழ்க்கையை மையமாக வைத்து, ‘பி எம் நரேந்திர மோடி’ என்ற பெயரில் திரைப்படம் உருவாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

தமிழில் ரத்த சரித்திரம், விவேகம் படங்களில் நடித்துள்ளவர் விவேக் ஓபராய், இவர் பிரதமர் நரேந்திர மோடி வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. மோடி கெட்டப்பில் விவேக் ஓபராயின் தோற்றம் இணைய தளத்தில் வைரலாகி உள்ளது. மன்மோகன் சிங், மோடி கெட்டப்பில் இருக்கும் நடிகர்களின் தோற்றங்களை வெளியிட்டு கமென்ட்ஸ் பகிர்ந்தும் வருகின்றனர்.

மன்மோகன் சிங் கெட்டப்பிற்கு அதிக வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில் மோடி கெட்டப் நடிகருக்கு எதிர்மறை கமென்ட் பகிர்ந்திருக்கின்றனர். தாடி, மீசை, தலைமுடி தோற்றங்கள் பொருந்தியநிலையில் முகத்தோற்ற மேக்அப்பில் இன்னும் சில மாற்றங்கள் செய்ய வேண்டி உள்ளது. அப்போதுதான் மோடியின் தோற்றத்தை பிரதிபலிக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

× RELATED நடிகையை கலாய்க்கும் நெட்டிஸன்கள்... அதுக்கு சரிப்பட்டு வரமாட்டாரு....