×

ஆமிர்கானுக்கு மகேஷ் பாபு பாராட்டு

மும்ைப: ‘சித்தாரே ஜமீன் பர்’ படத்தை பார்த்துவிட்டு ஆமிர் கானை பாராட்டியுள்ளார் மகேஷ் பாபு. ‘கல்யாண சமையல் சாதம்’ என்ற படத்தை இயக்கியவர் ஆர்.எஸ்.பிரசன்னா. தமிழ் இயக்குனரான இவர், இந்தியில் சில படங்களை இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் ஆமிர் கான், ெஜனிலியா நடித்துள்ள படம் ‘சித்தாரே ஜமீன் பர்’.

படத்தை பார்த்த மகேஷ் பாபு, ‘‘இந்த படம் உங்களை சிரிக்க வைக்கும், அழ வைக்கும், கைதட்ட செய்யும். இதற்கு முந்தைய ஆமிர்கான் படங்களைப் போல்’’ என குறிப்பிட்டு, ஆமிருக்கு பாராட்டும் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இப்படம், இந்தியாவில் மட்டும் 3 நாளில் ரூ.60 கோடி வசூலித்துள்ளது.

 

Tags : Mahesh Babu ,Aamir Khan ,Mumbai ,R.S. Prasanna ,Janhvi… ,
× RELATED இரண்டாவது படத்திலேயே இயக்குனரான நடிகை