மோகன்லாலுடன் நடிக்கும் மகன் பிரணவ்

மலையாளத்தில் பிரியதர்ஷன் இயக்கும் மரைக்காயர் - அரபிக்கடலின்டே சிம்ஹம் பட ஷூட்டிங் விரைவில் துவங்க இருக்கிறது. மோகன்லால் நடிக்கும் இந்த படம், 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த குஞ்சலி மரைக்காயர் வாழ்க்கையை தழுவி உருவாக உள்ள படம். இந்தியாவில் கோலோச்ச நினைத்த போர்த்துக்கீசியர்களை எதிர்த்து போரிட்டவர்தான் குஞ்சலி மரைக்காயர் என்கிற முஹம்மது. படத்தின் முக்கிய போர் காட்சிகளை முதலில் படமாக்க திட்டமிட்டுள்ளார் பிரியதர்ஷன்.

இதற்காக ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பிரமாண்ட அரங்குகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் ஆர்ட் டைரக்டர் சாபு சிரில். தற்போது மாதிரி கப்பல் ஒன்றை உருவாக்கும் வேலை நடக்கிறது. படத்தில் விஷுவல் எபெக்ட்ஸுக்கு முக்கியத்துவம் தரப்பட உள்ளது. இதில் மோகன்லாலின் இளமை கால காட்சிகளில் அவரது மகன் பிரணவ் நடிக்க உள்ளார்.

பிரியதர்ஷனின் மகள் கல்யாணி, தெலுங்கில் ஹலோ படத்தில் நடித்தார் அவரும் இதில் அப்பா டைரக்‌ஷனில் நடிக்கிறார். இவர்களுடன் பிரபு, இந்தி நடிகர் சுனில் ஷெட்டி, மஞ்சு வாரியர், அர்ஜுன் சர்ஜா நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மலையாள படங்களில் அதிக செலவில் உருவாக்கும் இந்த படம் 2020ல் திரைக்கு வருகிறது.

× RELATED 3டி படத்தை இயக்கும் மோகன்லால்