மீண்டும் சம்விருதா

ஸ்ரீகாந்த் ஜோடியாக உயிர் படத்தில் நடித்தவர், மலையாள நடிகை சம்விருதா. 2006ல் படம் ரிலீசானது. இதையடுத்து மலையாளத்தில் அதிக படங்களில் நடித்த அவர், திடீரென்று 2012ல் திருமணம் செய்துகொண்டு நடிப்புக்கு முழுக்கு போட்டார். இப்போது ஆறு வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் அவர் நடிக்க வந்துள்ளார். பிரஜித் இயக்கும் மலையாள படமான இதில், பிஜூ மேனன் ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ளார். தமிழில் வித்தியாசமான கேரக்டர் கிடைத்தால் நடிக்க தயாராக இருக்கிறாராம் சம்விருதா.

× RELATED தோற்றத்தை செதுக்கும் அஜீத்