×

பஞ்ச மூர்த்திகளின் மந்திரம்

விநாயகரை வணங்கி விரும்புமிவ்
விண்ணுரைகள் எல்லோரும் மனமகிழ
விக்கினங்களைப் போக்கிப் புனிதவாழ்
வெய்த வினைகள் விரைவில் விலகுமே!

வேலைக்கொண்டு சூரனை வென்ற வேலனே
வெற்றி யளித்தருள் கந்தனே வணங்கினேன்
நினைக்குமுன் நின் அடியார் துயர்தீர்க்கும்
ஆதி அருணாசல மமர்ந்த குகப்பெருமானே!

அம்பிகை அருள்சிந்துக என்னிடம்
அவனிக்கோர் சிறந்த அம்பிகை
அருலே உயிராய் அமர்ந்த
உத்தமத்தாய் மெத்த அறிந்தவன்
உமைஎன்ற நாமம் பெற்றவன்

சிவன்பாதம் கணமே கவனமாய்
நினைத்திடப் பெறுவோம் பேரருள் ஞானமே
அன்பைப் பெருக்கி அறிவை வளர்த்திட
அருள்வார் அம்பிகை நாதனே
செகத்தினோர்க்குச் சிந்தித்த

பலனைச் சடுதியில் பெற்றிடச்
சண்டேசனைச் சர்று நேரம்
சிந்தையில் வைத்தால் போதுமே
காமகோடியின் கட்டளைகள்
கலியைத் தொலைக்கும் கற்பனைகள்
சிறிது படித்துச் சீறியெழாமல்
மெத்தப் படித்து மகிழ்ச்சி யுறுவோமே!

கலைமகள்
காலையில் எழுந்து தாயைக்கும்பிடக்
கலைகளெல்லாம் நினைவில் நின்று
அறிவைப் பெருக்கி இன்பமளிக்கும்
நாராயணன்
குலந்தரும் செல்வந்தரும் சுகந்தரும்
புகழுந்தரும் செல்வக்குமரனின் தாயின்

தமையனைத் தயவுடன் நினைத்தோர்க்கே.
 கிருஷ்ணர்
வஸுதேவ ஸுதம் தேவம் கம்ஸசாதூர
மர்த்தனம் |

தேவகீ மரமாநந்தம் கிருஷ்ணம் வந்தேஜகத்குரும் ||
வாஸுதேவரின் புத்திரனும் கம்ஸ சாணூராதி தேவகியின் பரமானந்த மூர்த்தியும், மல்லர்களை அழித்தவனும், ஜகத்குருவும் ஆன  க்ருஷ்ண பரமாத்மாவை வணங்குகின்றேன்.
 ராகவேந்திரர்
பூஜ்யாய ராகவேந்த்ராய ஸத்ய தர்மதரதாய ச |

பஜதாம், கல்ப விருட்சாய நமதாம் காம தேனவே||
பூஜிக்கப்பட வேண்டியவரும் ஸத்யம், தர்ம ரக்ஷகரும் கற்பக விருக்ஷம் போல் பக்தர் குறைகளை தீர்த்து ஸகல நலங்களும் வாரி வாரி வழங்குபவரும், இஷ்டங்கள் யாவும் பூர்த்தி செய்பவருமான  ராகவேந்திர மஹானை ஸதா பூஜிக்கின்றேன்,
நமஸ்கரிக்கின்றேன்.
ஆஞ்சநேயர்
புத்திர் பலம் யசோதைர்யம் நிர்பயத்வமரோகதா |

அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத் ஸ்மரணாத்பவேத் ||
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி அஞ்சிலே ஒன்றாக ஆருயிர்காக ஏகி அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கை-
கக் கண்(டு) அயலார் ஊரில் அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவனெம்மை அளித்துக் காப்பான்.

குரு மந்திரம்

வியாழக்கிழமைகளிலோ, தினமுமோ இருவேளையும், முடியா விட்டால் ஒரு வேளையாவது படிப்பது நல்லது.
குரு பீடை விலகும்.
 கணேசாய நம: ||

குரூர் ப்ருஹஸ்பதிர் ஜீவ: ஸுராசார்யோ
விதாம் வர: |
வாகீஸோ தீக்ஷணோ தீர்கஸ்மஸ்ரூ: பீதாம்பரோயுவா: ||

குருவும், பிரகஸ்பதியும் என் ஜீவனும், தேவர்களின் ஆசார்யனும், புத்திசாலிகளில் சிறந்தவனும், வாக்கிற்கு ஈஸ்வரனும், புத்தி வடிவானவனும், நீண்டதாடி, மீசை உள்ளவனும், பீதாம்பரம் அணிந்தவனும் என்றும் இளமையோடிருப்பவனும்.

2. ஸுதா த்ருஷ்டிர் க்ரஹாதீஸோ க்ரஹபீடா பஹாரக: |
தயாகர: ஸௌம்ய மூர்த்தி: ஸுரார்ச்ய:
குட்மலத்யுதி: ||

அம்ருதமயமான பார்வையுடனும், கிரகங்களின் தலைவனும், கிரஹ பீடையைப் போக்குகின்றவனும், கருணைக்கிருப்பிடமானவனும், அழகிய வடிவம் கொண்டவனும், தேவர்களால் பூஜிக்கத்தக்கவனும், பூமொட்டைப் போன்ற காந்தியுடையவனும்.

3. லோக பூஜ்யோ லோக கருர் நீத்க்ஞோ நீதிகாரக: |
தாராபதிஸ் சாங்கிரஸோ வேத வேத்ய: பிதாமஹ: ||

உலகங்களெல்லாம் பூஜிக்கத் தகுந்தவனும், லோககுருவும், நீதி சாஸ்திரமறிந்தவனும், நீதியை உருவாக்குபவனும், தாரையின் கணவனும், அங்கிரஸ் முனிவருடைய புதல்வனும், வேதங்களால் அறியத் தக்கவனும், பிதாமஹனும்.

4. பக்த்ய ப்ருஹஸ்பதிம் ஸ்ம்ருத்வா நாமான்யே தானிய: படேத் |
அரோகி பலவான் மான் புத்ரவான் ஸபவேன் நர:
என்ற இந்த குருவின் புகழை எவரெவர் பக்தியுடன் படிக்கிறார்களோ அவன் வியாதிகளிலிருந்து விடுபட்டவனாகவும், பலவானாகவும், செல்வந்தனாகவும், புத்திர சம்பத்துள்ளவனாகவும் ஆகிறான்.

5.    ஜீவேத் வர்ஷ ஸதம் மர்த்யோ பாபம் நஸ்யதி நஸ்யதி |
ய: பூஜயேத் குருதினே பீத கந்தாக்ஷதாம்பரை: ||

6.    புஷ்ப தீபோ பஹாரைஸ்ச பூஜித்வா ப்ருஹஸ்பதிம்: |
ப்ராஹ்மணான் போஜயித்வா ச பீடா ஸாந்திர் பவேத் குரோ: ||

அவன் நூறு வயது வாழ்ந்திருப்பான். பாபங்கள் நிச்சயம் அழியும். குரு வாரத்தன்று மஞ்சள் நிறமுள்ள சந்தனம், அட்சதை, புஷ்பம், வஸ்திரம் இவைகளாலும் தீபம், தூபம், நிவேதனம், கற்பூரம் இவற்றாலும் பிரகஸ்பதியை பூஜிப்பவர், பூஜை முடிந்தபின் அந்தணர்களுக்கு அன்ன
மிடுபவர் இவர்களுக்கு குருபீடையினால் எந்தக் கஷ்டமும் ஏற்படாது.

அனுஷா

Tags : Pancha Murthys ,
× RELATED செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயிலில் ரத...