×

ஊர்வசி ரவுட்டேலா உடையில் ஓட்டை: ஏளனம் செய்த வெளிநாட்டினர்; கோபம் அடைந்த ரசிகர்கள்; கேன்ஸ் திரைப்பட விழாவில் சலசலப்பு

கேன்ஸ்: கேன்ஸ் திரைப்பட விழாவில் ஊர்வசி ரவுட்டேலா அணிந்து வந்த ஆடையில் ஓட்டை இருந்ததால் வெளிநாட்டு மீடியாவினர் அதை செய்தியாக்கிவிட்டனர். பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுட்டேலா, தமிழில் தி லெஜன்ட் படத்தில் நடித்துள்ளார். தெலுங்கிலும் சில படங்களில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். இவர் நேற்று முன்தினம் கேன்ஸ் பட விழாவில் அணிந்து வந்த கறுப்பு ஆடையில் கைப்பகுதியில் சிறு ஓட்டை இருந்தது. அதை புகைப்படம் எடுத்து சில வெளிநாட்டு மீடியாவினர் பெரிய தவறு போல் சித்தரித்தனர். இதைப் பார்த்து இந்திய ரசிகர்கள் கொதித்துள்ளனர். ‘‘உடை அணிந்த பிறகு லேசாக கிழிந்திருக்கலாம். அதை ஊர்வசி கவனித்து இருக்க மாட்டார். இதையெல்லாம் பெரிதாக்கி, இந்தியர்களை கேவலப்படுத்த முயல்வது அசிங்கமானது’’ என சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

Tags : Urvashi Rautela ,Cannes Film Festival ,Cannes ,Bollywood ,
× RELATED இந்தியில் அறிமுகமாகும் கல்யாணி பிரியதர்ஷன்