×

அப்படியெல்லாம் கேட்காதீங்க... நிவேதா கோபித்துக் கொள்கிறார்!

தாவணி, சுடிதார், டைட் ஜீன்ஸ் என்று எந்த காஸ்ட்யூம் போட்டாலும் பளீரடிக்கிறார் நிவேதா பெத்துராஜ். வில்லேஜ் & மாடர்ன் என்று இரு களங்களுக்கும் பொருந்தும் நாயகிகள் அமைவது அரிது. அம்மாதிரியான ரேர் பீஸாக அமைந்திருக்கிறார்.டிக் டிக் டிக் என்கிற பரிசோதனைப் படத்தின் வெற்றி அவரை ஏகத்துக்கும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. அடுத்து எழில் சாரோட ஜெகஜால கில்லாடியில் என்னை ரிலாக்ஸ் பண்ணிக்கிறேன் என்று சொல்லும் நிவேதாதான் இப்போது தமிழ் ஹீரோயின்களில் செம எனர்ஜி லெவலில் இருப்பவர்.

ஒரு ஹீரோயின் ஸ்டன்ட் ஆர்ட்டிஸ்ட் மாதிரி இவ்வளவு ரிஸ்க்கெல்லாம் எடுக்கணுமா?

பொழைப்பு பாஸ். சும்மா ஹீரோவோட டூயட் பாடிட்டு சம்பளத்தை வாங்கிட்டுப் போயிக்கிட்டிருந்தோம்னா சீக்கிரமே நம்மை ரசிகர்கள் மறந்துடுவாங்க.  டிக் டிக் டிக்குக்கு இவ்ளோ பாராட்டுக்கள் வரும்னு நானே நினைச்சுப் பார்க்கலை. படம் ரிலீஸாகி ரெண்டு மாசமாகுது. இன்னும்கூட வாட்ஸப்புலே அவ்ளோ பொக்கேக்கள் குவியுது. எல்லாருக்கும் தேங்க்ஸ், தேங்க்ஸ்னு ரிப்ளை பண்ணி என் விரல் தேஞ்சுக்கிட்டிருக்கு. அந்தப் படத்துல  என்னோட கேரக்டர் பத்தி டைரக்டர் சொன்னதும், ரொம்பவே சந்தோஷமாகிடுச்சு.

சின்ன வயசுலே இருந்தே அட்வெஞ்சர்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். காலேஜ் டைம்ல ட்ரெக்கிங், ஸ்கூபா டைவிங்னு இன்ட்ரஸ்ட் இருந்திருக்கு.  இதோட  ஷூட் போறதுக்கு முன்னாடியே, டைரக்டர் சக்‌தி சௌந்தரராஜன் சார் கூப்பிட்டு அந்தரத்தில் நீங்க, 360 டிகிரியில கயித்துல சுத்தி சுழல வேண்டியிருக்கும். மூணாறுல ட்ரெக்கிங் போக வேண்டியிருக்கும்....னு சொன்னார். அப்பவே, இந்தக் கேரக்டரை கண்டிப்பாக மிஸ் பண்ணிடக்கூடாதுனு. ஃபுல் ஸ்விங்ல இறங்கிட்டேன். நான் துபாயில் மார்ஷியல் ஆர்ட்ஸ் படிச்சதால, ரோப்ல தொங்குறது எளிதா இருக்கும்னு நினைச்சேன்.

ஆனா, என் கணிப்பு மிஸ்ஸாகிடுச்சு.  ரோப்ல தொங்கவிடுறதுக்கு முன்னாடி காலையில ஒரேஒரு இட்லி மட்டும் சாப்பிட்டால்தான், ரிஸ்க் இல்லாம இருக்கும். தண்ணீரும் அதிகமா குடிக்கக்கூடாதுனு சொல்லிட்டாங்க. அவ்வளவு சிரமங்களோடு நடிச்சது மறக்க முடியாதது.  மூணாறுல கொளுத்துற வெயில்ல ட்ரெக்கிங் போனதும் செம த்ரில்லிங்கா இருந்தது.

ஆனா, என்னை விட ரவி சாருக்கு இன்னும் கஷ்டம். காலையில் அவரை கயித்துல கட்டி தொங்கவிட்டால், எப்போ ஷூட் முடியுதோ அப்பதான் அவரை ரிலீஸ் பண்ணினாங்க. படப்பிடிப்பு பிரேக்ல படத்துல நமக்கு ஒரு டூயட் கூட இல்லியே....னு ரவிசார்கிட்ட கலாய்ச்சிட்டிருப்பேன். எப்பவும் பாசிட்டிவ் எனர்ஜி உள்ளவர் அவர்.

அடுத்து என்னென்ன படம் பண்றீங்க?  

எழில் சார் டைரக்‌ஷன்ல விஷ்ணு நடிக்கும் ஜெகஜால கில்லாடி. இதுல நான் கனடாவில் இருந்து ஹாலிடேக்காக நம்ம கிராமத்துக்கு வரும் பொண்ணா நடிச்சிட்டிருக்கேன். வெங்கட்பிரபு சாரோட பார்ட்டியில் என்ன கேரக்டர்னு இப்ப சொல்ல முடியாது. சஸ்பென்ஸ். அப்புறம் விஜய் ஆண்டனி சாருடன் திமிர் பிடிச்சவன்ல போலீஸாக நடிச்சிட்டிருக்கேன். அடுத்து  பிரபுதேவா சாரோட ஒரு படம், ஷூட்டிங் நடந்துக்கிட்டிருக்கு. இது தவிர தெலுங்கில் மென்டல் மதிலோ படத்துக்குப் பிறகு, அதே டைரக்டரோட அடுத்த படத்திலும் நடிக்கிறேன்.

தமிழ் - தெலுங்குன்னு ஒரே டைமில் டிராவல் பண்றதைப் பார்த்தா, நயன்தாராவோட இடத்தைக் குறி வெச்சிருக்கீங்க போலிருக்கே? அப்படி சொல்லிட முடியாது.  இப்ப தமிழில்தான் நிறைய படங்கள் பண்ணிட்டிருக்கேன். மென்டல் மதிலோவுக்காக ஹைதராபாத்துக்கு அடிக்கடி போனதில், தெலுங்கு கொஞ்சம் புரிய ஆரம்பிச்சிருக்கு.

இன்னும் கொஞ்ச நாளில் சரளமா பேச கத்துக்குவேன்னு ஒரு நம்பிக்கை இருக்கு. அதன்பிறகே ரெண்டு லாங்குவேஜிலும் கவனம் செலுத்துவேன். தமிழ்லே ஒரு நாள் கூத்து வந்தபோது, அடுத்தடுத்து ஏழு படங்கள் கமிட் ஆனேன். எல்லாமே எனக்கான ஸ்கோப் உள்ள படங்கள்தான். நல்ல கேரக்டர்களை மட்டுமே செலக்ட் பண்ணி நடிச்சிட்டிருக்கேன். கேரியர் நல்லாவே போயிட்டிருக்கு.   

இப்ப நீங்க மதுரை பொண்ணா, துபாய் பொண்ணா....?

ரெண்டும். கூடவே நம்ம சென்னையும் உண்டு.  என் அப்பா, அம்மா இன்னமும் துபாயில்தான் இருக்காங்க. ஸோ, மூணு மாசத்துக்கு ஒருதடவ அங்கே பறந்திடுவேன். இல்லேன்னா அவங்க இங்கே வந்திடுவாங்க.  துபாயில் என்னோட ஃப்ரெண்ட்ஸ், கார்னு மனசுக்கு பிடிச்ச விஷயங்கள் நிறைய இருக்கு. மதுரையில் என் உறவினர்கள் இருக்காங்க. அந்தப்பக்கம் ஷூட்டிங் போகும் போது அவங்களையும் சந்திச்சு ஒரு ஹாய் சொல்லிட்டு வருவேன்.

இவ்வளவு க்யூட்டான நிவேதாவுக்கு இன்னும் பாய் ஃப்ரெண்டு அமையலையா?

அமையலையே! நீங்க பாலிவுட் ஹீரோயின்கள்கிட்ட கேட்குறது மாதிரி இங்கேயும் அப்படி கேள்வி கேட்டா நாங்க என்னத்தை பதில் சொல்லுறது? நம்ம சூழல் வேறயாச்சே? ஆனாலும்கூட முக்கியமான ஒரு விஷயம்,  பாய் ஃப்ரெண்டு பத்தியெல்லாம் யோசிக்கக் கூட இப்ப டைம் இல்லை. ஐடியாவும் இல்ல. அதான் உண்மை.

சினிமா தவிர வேற எதிலெல்லாம் ஆர்வம்?


முழுக்கவனமும் சினிமாவில்தான் இருக்கு. காலேஜ் டேஸ்லே பெயின்ட்டிங் பண்ணுவேன். இப்பவும் வரைய ஆசையிருக்கு. ஆனா, நேரம் கிடைக்கறதில்லை. நான் வரைந்த ஆக்ரிலிக் பெயின்ட்டிங் எல்லாம் பத்திரமா பாதுகாத்து வச்சிருக்கேன். அப்புறம் எனக்குப் பிடிச்ச விஷயம் சாப்பாடு. எந்த ஊர் போனாலும் அங்கே என்ன ஃபுட் கிடைக்கும்னு தெரிஞ்சுக்குவேன்.

பிடிச்ச சாப்பாட்டை எக்ஸ்ட்ராவாகக் கூட கேட்டு வாங்கி சாப்பிடுவேன். டயட் பத்தி பயந்ததில்ல.  நம்ம இந்தியன் ஃபுட் தவிர அரபி, சைனீஷ் ஃபுட்ஸும் இஷ்டம். வேறென்ன... கார் டிரைவிங் ரொம்பப் பிடிக்கும். கிரிஸ்டல்ஸ் கலெக்‌ஷன்ஸ் வச்சிருக்கேன். கிரிஸ்டல்ஸைச் சேகரிக்கும்  ஹாபி எப்படி வந்து ஒட்டிக்கிச்சுனு தெரியல. ஆனா, சில வருஷங்களாக அதை கலெக்ட் பண்ண ஆரம்பிச்சிருக்கேன்.

Tags :
× RELATED ரசிகர் மரணம்: வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி!