×

காதலர்களின் நம்பரை சொல்லி மக்கள் கேலி பண்றாங்க: ஸ்ருதி ஹாசன்

சென்னை: எனது காதலர்களின் நம்பரை சொல்லி மக்கள் கேலி, கிண்டல் செய்வதாக ஸ்ருதி ஹாசன் கூறியுள்ளார்.
நடிகர்கள் நாக சைதன்யா, சித்தார்த், கிரிக்கெட் வீரர் ரெய்னா என மூன்று பிரபலங்களுடன் ஒவ்வொரு கட்டத்தில் காதல் ரிலேஷன்ஷிப்பில் இருந்தவர் ஸ்ருதி ஹாசன். பிறகு லண்டனை சேர்ந்த மைக்கேல் கர்செலுடன் லிவிங் டு கெதர் முறையில் வாழ்ந்தார். அவரை பிரிந்த பிறகு டாட்டூ கலைஞர் சாந்தனு என்பவரை காதலித்தார். கருத்து வேறுபாட்டால் அவரையும் பிரிந்து விட்டார்.

சமீபத்தில் அவரது காரில் ஒருவர் இருந்ததாகவும் அவரே அவரது புது காதலர் என்றும் தகவல்கள் பரவியது. இந்நிலையில் இது பற்றி ஸ்ருதிஹாசன் கூறும்போது, ‘‘இப்போது நான் சிங்கிளாக இருக்கிறேன். இதைச் சொன்னால் யாரும் நம்புவதில்லை. எனது காதலர்களின் நம்பரை சொல்லி மக்கள் கேலி, கிண்டல் செய்கிறார்கள். கேள்வி கேட்கிறார்கள். ஆனால் இது எனக்கு பெரிய பிரச்னை கிடையாது. இதனால் நான் வருத்தமும் அடையவில்லை. உண்மையான காதலை தேடும் சாதாரண பெண்ணாகவே என்னை நான் பார்க்கிறேன்’’ என்றார்.

 

Tags : Shruti Hassan ,Chennai ,Naga Chaitanya ,Siddharth ,Raina ,
× RELATED தமன்னா நடிக்கும்‘ஓ ரோமியோ’