சுஜாவின் அத்தான் நான்தான் : மனம் திறந்த நடிகர்

மிளகா படத்தில் கதாநாயகியாக நடித்ததுடன் பல்வேறு படங்களில் குணசித்ர வேடங்களில் நடித்திருப்பதுடன், கவர்ச்சி பாடல்களுக்கும் நடனம் ஆடியிருப்பவர் சுஜா வருணி. சமீபத்தில் இவர் திருப்பதி சென்று அதிகாலை சுப்ரபாதம் சேவையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்துவிட்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். அதில் சுஜாவுடன் நடிகர் சிவாஜிதேவ் உடனிருந்தார். அதன்பிறகுதான் இருவரும் காதலர்கள் என்பது தெரியவந்தது. இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என்று தகவல் பரவியது. இதுகுறித்து சுஜா கூறும்போது,’எனது திருமணம் நிச்சயமானால் அதுபற்றி நானே தெரிவிக்கிறேன். இப்போதைக்கு எனக்கு நிச்சயதார்த்தம் எதுவும் நடக்கவில்லை’ என்றார். இந்நிலையில் சிவாஜிதேவ் தனது இணைய தள பக்கத்தில் ஒரு தகவல் வெளியிட்டிருக்கிறார். அதில் சுஜாவின் அத்தான் நான்தான் என தெரிவித்திருக்கிறார்.

இதுபற்றி சிவாஜிதேவ் கூறியிருப்பதாவது: சுஜாவின் ரசிகர்களுக்கும் மீடியா நண்பர்களுக்கும் தெரிவித்துக்கொள்வது என்னவெனில், நானும் சுஜாவும் 11 வருடங்களாக காதலித்து வருவது உண்மைதான். எனது இயற்பெயர் ஷிவகுமார். எனது தாயார் இரண்டு ஆண்டுகளுக்கு முன் மரணம் அடைந்துவிட்டார்.  சிவாஜிதேவ் என்ற நான் இனி ஷிவகுமார் என்ற பெயரில்தான் நடிக்க உள்ளேன்.  நிகழ்ச்சி ஒன்றின்போது சுஜா தனது அத்தான் பற்றி குறிப்பிட்டிருந்தார். அவர் குறிப்பிட்ட அத்தான் நான்தான். நாங்கள் இருவரும் விரைவில் எங்கள் திருமணம் குறித்த தகவலை வெளியிட உள்ளோம். அதுவரை எங்களது தனிப்பட்ட விருப்பங்களுக்கு மதிப்பு கொடுத்து அமைதி காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

× RELATED நயன்தாரா வசனத்தில் டபுள் மீனிங் படம்