- நிகல் புட்டின்
- ஹாரி மெக்லூர்
- ரிச்சர்ட் ஃப்ளோரி
- பிஜே கோன்சால்வ்ஸ்
- ரிச்சர்ட் ஜான்சன்
- ஆண்ட்ரே அல்போன்சோ
- பெர்னி மோர்கன்
- சென்னை, இந்தியா…
ஏ நைஜல் புட்டின் தயாரிப்பு மற்றும் iணை தயாரிப்பாளர்களான ஹாரி மெக்லூர், ரிச்சர்ட் ஃப்ளோரி, பிஜே கோன்சால்வேஸ் மற்றும் இணை தயாரிப்பாளர்கள் ரிச்சர்ட் ஜான்சன், ஆண்ட்ரே அல்போன்சோ மற்றும் பெர்னி மோர்கன் ஆகியோருடன் இணைந்து இந்தியாவின் சென்னையில் தயாரிக்கப்பட்டு படமாக்கப்படவுள்ள திரைப்படம் ‘ தி இந்தியன் இன் மீ.
நைஜலும் ஹாரியும் இணைந்து பல தயாரிப்புகளில் பணியாற்றியுள்ளனர். இவர்களின் கடைசி இரண்டு படங்கள் கோயிங் அவே மற்றும் கல்கத்தா ஐயாம் ஸாரி.
இந்த ‘ தி இந்தியன் இன் மீ ‘ குறும்படம் சமீபத்திய தயாரிப்பு.
ஒரு வயதான ஆங்கிலோ-இந்தியர் ரிச்சர்ட் வால்டர்ஸ், தனது மரணப் படுக்கையில், தனது பாரம்பரியத்தின் இரு பக்கங்களையும் புரிந்து கொள்ளாமல் வெறும் பிரிட்டிஷ் ஆண் வம்சாவளியை மட்டுமே பெருமையாக நினைத்துக் கொண்டு வாழும் இந்த நிலையை நினைத்து கவலை அடைகிறார். அதே நேரத்தில் தனது இந்தியப் பிணைப்பும் மற்றும் வம்சாவளி பற்றி நினைத்து இத்தனை காலமும் வீண் அவமானங்களில் வாழ்ந்திருக்கிறார் என்பதை புரிந்து கொள்கிறார்.
தனது இன வெறி காரணமாக இத்தனை காலமும் தன் வாழ்ந்த வாழ்க்கை ஒரு பிழை என கருதி அதற்கு பரிகாரமாக தனது மகனின் மனைவியான இந்திய பெண் சாந்தியிடம் மானசிகமாக மன்னிப்பு கேட்டு திருத்திக் கொண்டு தன் மரணத்தை அடைய வேண்டும் என நினைக்கிறார்.
அவருக்கு இரண்டு மகன்கள் ஒருவர் பீட்டர் சென்னையில் வசிக்கிறார், மற்றொருவர் ஆங்கிலோ-இந்திய புலம்பெயர்ந்தோரின் ஒரு பகுதியாக இந்தியாவை விட்டு வெளியேறி மெல்போர்னில் வாழும் ஃப்ரெடி. அப்பாவின் இந்த கடைசி ஆசை முடிவால் அவரின் மகன்களுக்குள் குழப்பங்கள் உருவாகின்றன. ஒரு இந்திய பெண்ணிடம் தன் தந்தை மன்னிப்பு கேட்பதை ஃப்ரட்டி விரும்பவில்லை. ஆனால் பீட்டர் வாழ்வியலின் உண்மை நிலையை புரிந்து கொண்டு அப்பாவின் ஆசைக்கு சம்மதிக்கிறார். மன்னிப்பு கேட்டுவிட்டு மூச்சை இழுத்து விடும் பொழுது பெரியவர் தன்னை வளர்த்த இந்திய ஆயா மேரி ராணியின் பெயரைச் சொல்லிவிட்டு இறந்து விடுகிறார்.
பிரிட்டிஷ் காரர்கள் குறித்து நாம் நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம். பாண்டிச்சேரி உள்ளிட்ட பல இடங்களில் அவர்களில் பலரும் இங்கே இந்தியாவிலேயே தங்கி தங்களது சொந்த நாடாகவே ஏற்றுக்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் அவர்களுக்குள் இப்படியான ஒரு பிரிட்டிஷ் மற்றும் இந்திய கலப்பு உணர்வால் அவர்கள் மனதளவில் சந்திக்கும் பிரச்சனையை மிக அற்புதமாக எடுத்து வைத்திருக்கிறது இந்த 28 நிமிடங்கள் ஓடும் ‘ தி இந்தியன் இன் மீ ‘ குறும்படம்.

