×

சுப்புராயனும் சுப்புலட்சுமியும்

அன்பர்கள், அப்பன் என்ற சொல்லால் ஆண்டவனை அழைக்கின்றனர். ‘‘அம்மையே அப்பா ஒப்பிலாமணியே’’, என்கிறார் மணிவாசகர். ‘‘அப்பன் நீ. அம்மை நீ. அன்புடை மாமனும் மாமியும் நீ’’ என்கிறார், அப்பர்.சிவபெருமான், அப்பன் என்றால் அவரது மகன் சுப்பனாக இருக்கிறான். அப்பனும் சுப்பனும் அடியவர்க்கு உதவும் பெருமான்களாக இருக்கின்றனர். ‘‘சு’’ என்ற எழுத்தை அப்பன் என்பதோடு முன்னோட்டாகச் சேர்த்து சுப்பன் என வழங்குகின்றனர். ‘சு’ என்பது மேலான, சிறப்பான என்ற பொருளைத் தருகின்றது. முருகனைச் சுப்பன் என்று அழைக்கின்றனர்.

அரையன் என்னும் சொல் தலைவன், அரசன் என்ற பொருளைத் தருகிறது. சுப்பனோடு அரையனைச் சேர்த்து சுப்புராயன் என்று அழைக்கின்றனர்.
முருகனுக்குரிய பெயர்களுள் சிறப்புப் பெற்ற ஒன்றாகச் சுப்புராயன் என்பது வழங்கி வருகிறது. குறிப்பாகப் பாம்பு வடிவில் தோன்றி அருள்பாலிக்கும்
முருகப் பெருமானுக்குச் சுப்பு ராயர் என்ற பெயர் வழங்குகிறது. மக்கள் சுப்பு, சுப்பன், சுப்புராயன் போன்ற பெயர்களைச் சூட்டிக் கொண்டுள்ளனர். வேங்கடசுப்ரமணியன் என்பதுபோல வெங்கடசுப்பு என்ற பெயரையும் இட்டுக் கொள்கின்றனர்.

சுப்புராயனான முருகனைப் பிரியாது இருக்கும் வள்ளியம்மைக்குச் சுப்புலட்சுமி என்பது பெயர். அவள் சுப்புலட்சுமி எனப்படுகிறாள். பெண்களுக்குச் சுப்புலட்சுமி என்ற பெயரைச் சூட்டுகின்றனர். தென்னகமெங்கும் சுப்புலட்சுமி, சுப்பம்மாள் எனும் பெயர்கள் வழக்கில் உள்ளன.

Tags : Subbulakshmi ,
× RELATED தமிழக சட்டப்பேரவையில் வ.உ.சி.,...