×

சோஷியல் மீடியாவில் போலிகள்: கயாடு லோஹர் ஷாக்

சென்னை: சமீபத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் கயாடு லோஹர். தமிழில் அவர் அறிமுகமான இந்த முதல் படத்திலேயே ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக மாறிவிட்டார். படமும் வெற்றி படமாக அமைந்ததால் ராசியான நடிகை என்கிற பெயரும் கிடைத்துவிட்டது. இதையடுத்து அதர்வாவுடன் ‘இதயம் முரளி’ என்கிற படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படமும் விரைவில் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இந்த நிலையில் கயாடு லோஹரின் பெயரில் சோசியல் மீடியாவில் குறிப்பாக பேஸ்புக் மற்றும் எக்ஸ் வலைதளங்களில் பல கணக்குகள் போலியாக துவங்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக கயாடு லோஹர் தனது அதிகாரப்பூர்வமான எக்ஸ் பக்கத்தில் இது குறித்து ரசிகர்களுக்கு தகவல் தரும் விதமாக பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், “சோசியல் மீடியாவில் என்னுடைய இந்த எக்ஸ் கணக்கு தவிர என் பெயரில் எந்த கணக்கும் இல்லை. மற்றவை அனைத்தும் போலிகள், அதில் வெளியாகும் செய்திகள் எதையும் ரசிகர்கள் நம்ப வேண்டாம். நான் இந்த அதிகாரப்பூர்வ கணக்கின் மூலமாக சரியான நேரத்தில் உங்களுடன் சரியான தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Tags : Chennai ,Gayadu Lohar ,Pradeep Ranganathan ,
× RELATED திடீரென்று கிளாமருக்கு மாறிய ரஜிஷா விஜயன்