- ஆரியின் 4 வது மாடி
- சென்னை
- சைக்கோ-கிரியேஷன்
- அரி அர்ஜுனன்
- தீப்சிகா
- பவித்திரா
- தலவாசல் விஜய்
- ஆதித்யா கதீர்
- ஆதித்யா காதிர்

சென்னை: மனோ கிரியேஷன் சார்பில் ஏ. ராஜா தயாரிப்பில், ஆரி அர்ஜூனன், தீப்ஷிகா, பவித்ரா, தலைவாசல் விஜய், ஆதித்யா கதிர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அதன் தலைப்பினை, படக்குழு படத்தின் நாயகன் ஆரி அர்ஜூனன் பிறந்தநாளில் அறிவித்தது. படத்தின் தலைப்பு ‘4த் ஃபுளோர்’ (நான்காவது மாடி). படத்தை சுந்தரபாண்டி எழுதி இயக்கியுள்ளார். லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தரண்குமார் இசை அமைத்துள்ளார்.
ஆரியின் பிறந்தநாளை பூந்தமல்லியில் உள்ள பார்வைத்திறன் குன்றியோர் பள்ளியில் கேக் வெட்டியும், விருந்து பரிமாறியும் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து படத்தின் தலைப்பினை பார்வைத்திறன் குன்றிய வயதானவர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் ஆரி அர்ஜூனன் வெளியிட்டார். ஆரி நடித்துள்ள இப்படம் பரபரப்பான திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது. இதன் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாக இருக்கிறது.

