×

சீரடி சாய்பாபாவுக்கு திவ்ய விரத பூஜை செய்யும் முறை..!

திவ்ய விரத பூஜையை சாய்பாபாவிற்கு உகந்த நாளான வியாழக்கிழமைகளில் செய்ய வேண்டும். இந்த விரத பூஜையை எப்படி செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

இந்த பூஜையை சாய்பாபாவிற்கு உகந்த நாளான வியாழக்கிழமைகளில் செய்ய வேண்டும்.

1) பூஜைக்கு முதல் நாள் உள்ளங்கையளவு வெள்ளை புதுத்துணி ஒன்றை எடுத்து மஞ்சளில் நனைத்து உலர வைக்க வேண்டும்.

2) வியாழன் அன்று பூஜையறையில் பாபாவின் படம் அல்லது சிலை ஒன்றை மஞ்சள் நிறத்துணி ஒன்று விரித்து அதன் மீது வைக்க வேண்டும். பாபாவிற்கு சந்தனம், குங்குமம் போட்டு வைத்து வாசனை மிகுந்த மலர்களால் (மல்லிகை, பன்னீர் ரோஜா) அலங்கரிக்க வேண்டும். பாபாவிற்கு விளக்கு என்றால் மிகவும் பிடிக்கும். ஆதலால் நெய் விளக்குகள் ஏற்றவும். ஊதுபத்தி, சாம்பிராணி ஏற்றவும், விநாயகர் படத்தையும் பூஜையில் வைக்க வேண்டும். எந்த பூஜை செய்தாலும் முதல் வழிபாடு விநாயகருக் குதான் என்பது அனைவருக்கும் தெரியும். பூஜை தடையின்றி நடக்க விநாயகரை பிராத்திப்போம்.

3) மஞ்சள் தோய்த்த துணியில் 1 அல்லது 2 ரூபாய் நாணயத்தை (விருப்பத்திற்கு ஏற்ப நாணயம்) முதல் வாரம் மட்டும் வைக்க வேண்டும்.

4)பாபாவிடம் உங்களது வேண்டுகோளை கூறி 5, 7, 11, 21 வாரங்கள் பூஜை செய்வதாக சங்கல்பம் செய்ய வேண்டும்.


5) சிறிதளவு உதிரி பூக்கள் எடுத்து சாய்பாபாவிற்கு பக்கத்தில் வைக்கவும்.

6) பாபாவிற்கு நமஸ்காரம் செய்ய வேண்டும்.

7) பிறகு சாய்பாபாவின் 108 அஷ்டோத்திரம் படித்து உதிரிப்பூக்களால் பாபாவிற்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.

8) பாபாவின் மகிமையை சொல்லும் திவ்யபூஜை கதைகளை படிக்க வேண்டும். பாபாவின் பாடல்களை பாட வேண்டும்.

9) பாபாவை நினைத்து தியானம் செய்ய வேண்டும். ஆரத்தி பாடல்கள் பாடி ஆரத்தி எடுக்க வேண்டும்.

10) பாபாவிற்கு கிச்சடி பிரசாதம் அர்ப்பணிக்க வேண்டும்.


11) பிராத்தித்தபடி 5,7,11,21 வாரங்கள் வியாழக்கிழமைகளில் செய்தல் வேண்டும். கடைசி வாரம் பிற பெண்களை அழைத்து பிரசாதம் கொடுத்து, பாபாவின் திவ்ய பூஜை புத்தகத்தை தங்கள் விருப்பப்படி 5, 7, 11, 21 அல்லது 101 புத்தகங்களை கொடுக்கலாம். இந்த புத்தகம் சாயி பாபாவின் அற்புத மகிமையை மக்களுக்கு வெளிப்படுத்தும்.

12) இடையில் ஏதாவது காரணத்தினால் ஒரு வியாழக்கிழமை செய்ய முடியாவிட்டால் அடுத்த வியாழக்கிழமைகளில் தொடரலாம். எண்ணியபடியான வாரங்கள் பூஜையை செய்து முடிக்கவும்.

13) ஒரு தடவை 5, 7, 11 அல்லது 21 வாரங்கள் பூஜையை முடித்த பின் நீங்கள் விரும்பினால் மீண்டும் 1 முறை பூஜையை ஆரம்பிக்கலாம்.

இங்கு சொல்லியபடி உங்களால் எதுவெல்லாம் செய்ய முடியுமோ அதை செய்யுங்கள். நாம் பாபா மீது கொண்டுள்ள பக்தி ஒன்றையே பார்க்கிறார். நாம் செய்யும் பிரசாதம் எதுவாகினும் அன்போடு பாபாவிற்கு கொடுத்தால் அதை ஏற்பவர் ககருணை உள்ளம் கொண்ட பாபா. பாபாவிடம் நம் கோரிக்கைகளை வைத்து அவர் அருளை பெறுவோம்.

Tags : Divya ,fasting ceremony ,Saritha Saibaba ,
× RELATED உபியில் இளம்பெண் பலாத்காரம் செய்து...