×

கள்ளநோட்டு டீசர் வெளியீடு

சென்னை: கள்ள நோட்டு பற்றிய கதையை மையமாக வைத்து ‘கள்ள நோட்டு ‘என்கிற பெயரிலேயே ஒரு திரைப்படம் உருவாகி இருக்கிறது. இப் படத்தினை எம்.ஜி. ராயன் எழுதி இயக்கியுள்ளார். சம்பத்குமார் ஏ ஒளிப்பதிவு செய்துள்ளார். முத்து கொடப்பா படத்தொகுப்பு செய்துள்ளார். எம்.ஜி. ரா ஃபிலிம் பேக்டரி சார்பில் எம்.ஜி. ராஜேந்திரன் தயாரித்துள்ளார். ‘கள்ள நோட்டு’ படத்தின் நாயகனாக எம்.ஜி. ராயன், நாயகியாக மது, வில்லன்களாக குமார், மிப்புசாமி, வில்லியாக சுமதி, நாயகனின் நண்பனாக நா. ரஞ்சித்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் என்.ராஜேந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர். வறுமையால் துரத்தப்பட்டவர்கள், பணத்தாசை பிடித்தவர்கள் இருவருமே கள்ள நோட்டு என்ற கறுப்புச் சகதிக்குள் சிக்கிக் கொள்வதுண்டு. அதிலிருந்து மீள முடியாமல் தவிப்பதுண்டு. அப்படிச் சிக்கிக் கொண்ட ஒருவனின் கதை தான் கள்ள நோட்டு என்கிற திரைப்படம் என்கிறது படக்குழு. கள்ள நோட்டு படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

Tags : Chennai ,M. G. ,Ryan ,Sampatkumar A ,Muthu Kodappa ,
× RELATED எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள்...