×

லட்ச தீபம்

ஆலயங்களில் தினமும் அன்பர்களால் அனேக விளக்குகள் ஏற்றப்படுகின்றன என்றாலும் கார்த்திகைப் பௌர்ணமியில் அதிக அளவு விளக்குகள் ஏற்றப்படுகின்றன. சில ஆலயங்களில் லட்ச தீபம் எனும் விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. ஒரு லட்சம் அகல்கள் ஏற்றப்பட்டு ஆலய மதில்கள் பிராகாரங்கள், கோபுரங்கள், விமானங்கள், மண்டபங்கள் முதலிய இடங்களில் வைக்கப்படுகின்றன. பிராகாரத்தில் தாமரை, இடபம், சிவலிங்கம் முதலிய வடிவங்கள் கோலங்களாக வரையப்பட்டு அதன்மீது வரிசையாக தீபங்கள் வைக்கப்படுகின்றன.

திருக்குளங்களின் படிகட்டுகளிலும் வரிசை வரிசையாக தீபங்களை ஏற்றுகின்றனர். எண்ணற்ற தீபங்களின் ஒளியில் ஆலயம் பிரகாசமாக ஒளிர்வது கண்கொள்ளக் காட்சியாகும். மயிலாப்பூரில் ஆண்டுதோறும் லட்சதீபப் பெருவிழா கொண்டாடப்படுகிறது. திருக்கழுக்குன்றம் வேதகிரீசர், திரிபுரசுந்தரி ஆலயங்களில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை லட்சதீபம் ஏற்றப்படுகிறது.

Tags :
× RELATED தீயணைப்பு துறை சார்பில் தீ செயலி விழிப்புணர்வு