சென்னை: டி.வி தொடர்கள் மற்றும் சினிமா மூலமாக பிரபலமானவர், வாணி போஜன். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், தன்னைப் பற்றிய ட்ரோல்கள் குறித்தும், போட்டோக்களை ஆபாசமாக சித்தரிப்பது குறித்தும் அதிக வேதனையுடன் பேசியிருக் கிறார். அது வருமாறு: சோஷியல் மீடியாவில் சிலர் ஆபாசமாகவும், நடிகர்களுடன் சேர்த்தும் வதந்தி பரப்பி வருவதைப் பார்க்கும் போது வேதனையாக இருக்கும். நடிக்க வந்துவிட்டோம், இதை எதிர்கொண்டே ஆக வேண்டும் என்று நான் விட்டு விடுவேன்.
என்னுடன் நடித்த வர்கள் சிலருடன் நட்புடன் நான் பழகினாலோ அல்லது அவர்களுடன் வெளியில் சென்றாலோ, உடனே அதுபற்றி தவறாகப் பேசுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. எனக்கு அருகில் நின்றிருந்த ஒரு போட்டோகிராபரையும், என்னையும் இணைத்துப் பேசினார்கள். பிறகு அவருக்கும், எனக்கும் திருமணம் நடந்துவிட்டது என்று சொன்னார்கள். தினமும் இன்ஸ்டாகிராமில் நான் போஸ்ட் செய்யும் போட்டோக்களைப் பார்த்துவிட்டு, ‘ஆடையைக் குறைக்க, குறைக்க வாய்ப்புகள் அதிகமாக வரும்’ என்று சிலர் தவறான கமென்ட்டை பதிவு செய்வார்கள்.
திரைப்பட நடிகையான என்னை மிகப் பிரபலமாக வைத்துக்கொள்ள, விதவிதமாக போட்டோக்கள் எடுத்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்கிறேன். உடனே அந்த போட்டோக்களை ஆபாசமாக சித்தரித்து வைரல் ஆக்குவதை முழுநேர வேலை போல் செய்து வருகின்றனர். ஒருவரை ட்ரோல் பண்ணலாம். எதற்கும் ஒரு வரைமுறை இருக்கிறது. பெரும்பாலும் இது நடிகர்களுக்கு நடக்காது. நடிகைகளை மட்டும் இப்படி ட்ரோல் செய்து வருகிறார்கள். டி.வியிலிருந்து சினிமாவுக்கு வந்த என்னை, ‘சீரியலிலிருந்து வந்தவர் கூட எல்லாம் நடிக்க முடியாது’ என்று பலபேர் சொல்லி இருக்கிறார்கள்.