×

இந்த வாரம் என்ன விசேஷம்?

நவம்பர் 16, சனி - சதுர்த்தி விரதம். கடைமுகம் தீர்த்தம். திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்த சாரதிப் பெருமாள் திருக்கோயிலில் வரதராஜ மூலவருக்குத் திருமஞ்சன சேவை. குச்சனூர் ஸ்ரீசனீஸ்வர பகவான் சிறப்பு தரிசனம்.

நவம்பர் 17, ஞாயிறு - கார்த்திகை மாதம் பிறப்பு. முடவன் முழுக்கு, ஸ்ரீவாஞ்சியம் பானுவார தீர்த்தம். திருக்கோயிலில் குளக்கரை ஆஞ்சநேய ஸ்வாமிக்குத் திருமஞ்சன சேவை. ஸ்ரீ ஐயப்ப பக்தர்கள் மாலை யணியும் நிகழ்ச்சி. விஷ்ணுபதி புண்ய காலம்.

நவம்பர் 18, திங்கள் - சஷ்டி விரதம். கார்த்திகை முதல் சோமவாரம். வடலூரில் மாத பூசம். சிவாலயங்களில் சங்காபிஷேகம். திருநெல்வேலி நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. திருவல்லிக்கேணி பார்த்த சாரதிப் பெருமாள் திருக்கோயிலில் மூலவருக்குத் திருமஞ்சன சேவை.

நவம்பர் 19, செவ்வாய் -  திதித்வயம். திருவையாறு ஐயாறப்பர் எமதர்ம வாகனத்தில் காவேரியில் தீர்த்தம் கொடுத்தல். ஆட்கொண்டார் வடைமாலைக்காட்சி. சுவாமிமலை  முருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்
மூலவருக்குத் திருமஞ்சன சேவை.

நவம்பர் 20, புதன் -  மஹாதேவாஷ்டமி. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோயிலில் நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை. காலபைரவாஷ்டமி.

நவம்பர் 21, வியாழன் - சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு. ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

நவம்பர் 22, வெள்ளி - ஏகாதசி. சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.

Tags :
× RELATED திருவிளக்கை எவ்வாறு வணங்க வேண்டும்!