×

மை விழி மணிகண்டன்

பரசுராமர், கேரள பூமியில் மொத்தம் 108 இடங்களில் திருக்கோயில் அமைத்ததாக வரலாறு கூறுகிறது. அவற்றுள் 18 கோயில்களில் சுவாமி  ஐயப்பன் விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்துள்ளார். சபரி மலையில் சுவாமி ஐயப்பன் விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்தவரும் பரசுராமரே. சுவாமி  ஐயப்பன் பூலோகத்தில் தனது அவதார நோக்கம் முடிவடைந்ததும் (பன்னிரண்டாம் வயதில்) இந்த விக்கிரகத்தில்தான் ஐக்கியமானார் என்பது  புராணம் கூறும் தகவல். கிராமப்புறங்களில் ஐயனார் எனப்படும் சாஸ்தா வழிபாடு அதிகம். திருச்சி-பெரம்பலூருக்கு இடையே உள்ள திருத்தலம் திருப்பட்டூர். இங்கு  கோயில் கொண்டுள்ள  மகாசாஸ்தா, கையில் ‘திருஉலா ஏடு’ ஏந்தியபடி காட்சி தருகிறார்.

இவரை அரங்கேற்றிய ஐயனார் என்பர். நாகர்கோவிலிலிருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் உள்ள ஊர் ‘ஆஸ்ரமம்.’ இங்கு அருள்புரியும் சாஸ்தாவின் திருநாமம் ‘அஞ்சனம் எழுதிய  கண்டன் சாஸ்தா’. கழுத்தில் பதக்கம், நெற்றியில் விபூதிப் பட்டையுடன் திகழும் இவர், ஒரு காலை மடக்கி வைத்து அமர்ந்தபடி வித்தியாசமான கோலத்தில்  காட்சி தருகிறார். இங்கு சாஸ்தாவை வேண்டி ‘அத்திரி முனிவர்’ யாகம் செய்ததாகக் கூறுவர்.முருகப் பெருமானுக்கு அறுபடை வீடு உண்டு. அவரது அண்ணன் விநாயகருக்கும் அறுபடை வீடு உண்டு. அதேபோல் சுவாமி ஐயப்பனுக்கும்  அறுபடை வீடு உண்டு. அவை: அச்சன்கோயில், ஆரியன்காவு, குளத்துப்புழை, எருமேலி, பந்தளம், சபரிமலை.

Tags : Manikandan ,
× RELATED புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில்...