×

சூர்யா-45 படத்தில் சுவாசிகா

சென்னை: கடந்த 2009ல் ‘வைகை’ என்ற தமிழ்ப் படத்தில் அறிமுகமானவர், மலையாள நடிகை சுவாசிகா விஜய். தொடர்ந்து ‘கோரிப்பாளையம்’, ‘சாட்டை’, ‘அப்புச்சி கிராமம்’ உள்பட ஏராளமான படங்களில் நடித்திருந்த அவருக்கு திடீரென்று புதுப்பட வாய்ப்புகள் குறைந்தது. எனவே, மலையாளம் மற்றும் தெலுங்கில் நடித்து வந்தார். திடீரென்று பிரேம் ஜேக்கப் என்ற காதலனை திருமணம் செய்துகொண்ட சுவாசிகா விஜய், 6 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடித்தார்.

ஹரீஷ் கல்யாண் நடித்து ஹிட்டான ‘லப்பர் பந்து’ என்ற படத்தில், ‘அட்ட கத்தி’ தினேஷ் மனைவியாக நடித்த அவருக்கு ரசிகர்களிடம் வரவேற்பும், பாராட்டுகளும் கிடைத்தது. இந்நிலையில், நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூர்யா-45’ என்ற படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார். ஆன்மீகப் பின்னணி கதைகொண்ட இதில், சூர்யாவுடன் இணைந்து திரிஷா நடிக்கிறார். ‘மௌனம் பேசியதே’, ‘ஆறு’ ஆகிய படங்களுக்குப் பிறகு

மீண்டும் அவர்கள் இணைந்து பணியாற்று கின்றனர். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு ெசய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு தயாரிக்கின்றனர். தற்போது கோவையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

Tags : Swasika ,Chennai ,Swasika Vijay ,
× RELATED ஹரீஷ் கல்யாணுக்கு மாமியாராக நடிக்க பயந்தேன்: சுவாசிகா