×

விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்...

விளக்கினை ஏற்றி
வெளியை அறிமின்
விளக்கினின் முன்னே
வேதனை மாறும்
விளக்கை விளக்கும்
விளக்குடையார்கள்
விளக்கில் விளங்கும்,
விளக்கவர் தாமே

திருவருளாகிய திருவடியுணர்வைப் பொருந்தி அறிவருள் வெளியாகிய சிவபெருமானை உணருங்கள், அந்த திருவருள் ஒளி முன்பிறவி காரணமாக ஏற்பட்ட  துன்பங்கள் அனைத்தும் நீங்கும். சிவபெருமானை உணர்த்தும் திருவருளாகிய இயற்கை அறிவு விளக்கை பெற்றவர்கள், திருவருளாகிய விளக்கினைத்  திருமேனியாகக்கொண்டு ஒளிர்ந்து விளங்கும் விளக்காகிய சிவத்துள் ஒடுங்க சிவமாய்த் திகழ்வர். விளக்கை விளக்கும் விளக்கு, அருளை தெரிவிக்கும் ஞான  விளக்கில் விளங்கும் விளக்கு அருளில் ஒளிரும் சிவம்.

Tags :
× RELATED இன்றிரவு 9.09 மணிக்கு ஒளியேற்றும்...