இந்த வாரம் என்ன விசேஷம்?

அக்டோபர் 19, சனி -  கிருஷ்ணபட்ச சஷ்டி,  சேங்காலிபுரம் ஸ்ரீ அனந்தராம தீட்சதர் ஆராதனை. துலாஸ்நான ஆரம்பம். தூத்துக்குடி ஸ்ரீபாகம்பிரியாள் புறப்பாடு கண்டருளல். குச்சனூர் ஸ்ரீசனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.

அக்டோபர் 20, ஞாயிறு -  கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நதி எதிரில் ஸ்ரீஹனுமாருக்குத் திருமஞ்சன சேவை.

அக்டோபர் 21, திங்கள் - பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு. சங்கரன் கோவில் கோமதியம்மன் புஷ்பப்பாவாடை தரிசனம். கோவில்பட்டி ஸ்ரீசெண்பகவல்லியம்மன் பவனி.

அக்டோபர் 22, செவ்வாய் -  சத்தியார். சோளிங்கபுரம் ஸ்ரீ அமிர்தவல்லித் தாயார் பக்தோதிசிகப் பெருமாள் திருக்கல்யாண வைபவம். சுவாமிமலை ஸ்ரீமுருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.

அக்டோபர் 23, புதன்  -  திருநெல்வேலி ஸ்ரீகாந்திமதியம்மன் ரதோற்ஸவம். ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீமணவாள மாமுனிகள் உற்சவாரம்பம்.

அக்டோபர் 24, வியாழன் - கிருஷ்ணபட்ச ஸர்வ ஏகாதசி, சித்திவளாக கொடியேற்றம், காஞ்சி ஸ்ரீ காமாட்சி தபஸ் ஆரம்பம், ஸ்ரீரங்கம் டோலோற்சவ சாற்றுமறை. ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீஆண்டாள் ஸ்ரீரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

அக்டோபர் 25, வெள்ளி -  மஹா பிரதோஷம். தென்காசி, பத்தமடை, வீரவநல்லூர், தூத்துக்குடி, சங்கரநயினார் கோவில், கடையம் இத்தலங்களில் ஸ்ரீ அம்பாள் திருக்கல்யாண வைபவம்.

Tags :
× RELATED நவக்கிரஹ தோஷம் போக்குவார் பரிபூரண கிருபேஸ்வரர்