×

ஆபாச காட்சி லீக் நடிகை ஆவேசம்

கொச்சி: மல்லுவுட்டில் உருவான ‘ஆல் வீ இமேஜின் அஸ் லைட்’ படம், கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு, கிராண்ட் பிரிக்ஸ் என்ற பிரிவில் விருது வென்றது. இப்படத்தில் நடிகை திவ்யா பிரபா நடித்த ஆபாச காட்சி இணையத்தில் கசிந்தது. மேலும் சில விமர்சனங்களையும் சந்தித்தது. இது குறித்து தற்போது நடிகை திவ்யா பிரபா சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அவர் பேசுகையில், “நான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட போதே கேரளாவில் இருந்த சில அமைப்புகளிடமிருந்து எதிர்ப்பு வரும் என எதிர்பார்த்தேன்.

கசிந்த வீடியோவை பகிர்ந்து வரும் நபர்கள் வெறும் 10 சதவிகித மக்கள். அவர்களின் மனநிலையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. படத்துக்கு ஒப்புதல் கொடுத்த மத்திய வாரியக் குழுவில் மலையாளிகளும் இருந்தனர். ஒரு நடிகையாக எனக்கு பிடித்த கதைகளில் நடிக்கிறேன். அந்த வகையில்தான் ‘ஆல் வீ இமேஜின் அஸ் லைட்’ படத்திலும் எனது கதாபாத்திரம் பிடித்து நடித்தேன். புகழுக்காக நான் ஆபாச காட்சியில் நடித்ததாக சிலர் விமர்சனம் செய்கிறார்கள். நான் பல விருதுகளை வென்றிருக்கிறேன். அதோடு விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட படங்களிலும் நடித்திருக்கிறேன். அதனால் ஆபாசமாக நடித்துதான் புகழ் பெற வேண்டும் என்ற நிலைமை எனக்கு இல்லை” என்றார்.

Tags : Kochi ,Malluwood ,Cannes Film Festival ,Divya Prabha ,
× RELATED விதி மீறும் வாகனங்களால் தொடரும்...