×

இந்த வாரம் என்ன விசேஷம்?

செப்டம்பர் 21, சனி -  சப்தமி. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தஸாரதிப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீவரதராஜ மூலவருக்குத் திருமஞ்சன சேவை.

செப்டம்பர் 22, ஞாயிறு - மத்யாஷ்டமி, மஹா வியதீபாதம். சங்கரன்கோயில் ஸ்ரீ சங்கரநாராயண சுவாமியின் மேல் சூரிய ஒளி பொலிவுடன் படுவதை தரிசிக்கலாம்.

செப்டம்பர் 23, திங்கள் - அவிதவாநவமி. திதித்வயம். பத்ராசலம் ராமபிரான் புறப்பாடு. சங்கரன் கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

செப்டம்பர் 24, செவ்வாய் - தசமி. வடலூரில் மாத பூசம் நட்சத்திர அமாவாசை. சுவாமிமலை ஸ்ரீமுருகப் பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.

செப்டம்பர் 25, புதன் - ஏகாதசி. கோவிந்தபுரம் ஸ்ரீபோதேந்திராள் ஆராதனை. மஹாளயம். கிருஷ்ணபக்ஷ ஸர்வ ஏகாதசி. ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்
பெருமான் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்காரத் திருமஞ்சன சேவை.

செப்டம்பர் 26, வியாழன் - துவாதசி , திரயோதசி. மஹாபிரதோஷம். கெஜ கௌரி விரதம். சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

செப்டம்பர் 27, வெள்ளி - சதுர்த்தசி. மாதசிவராத்திரி. கேதாரவ்ரதஸமாப்தம். அருணந்திசிவாசார்யர் (அடியவர்). ஸ்ரீ நெல்லையப்பர், ஸ்ரீகாந்திமதியம்மன் இருவருக்கும் திருமஞ்சன சேவை.

Tags :
× RELATED சாய் சத்சரிதத்தை எத்தனை நாட்களுக்குள் படித்து முடிக்க வேண்டும்..?