×

மாளவிகா மேனன் பற்றி அவதூறு பரப்பியவர் கைது

திருவனந்தபுரம்: மலையாள நடிகை மாளவிகா மேனன், தமிழில் ‘இவன் வேற மாதிரி’, ‘விழா’, ‘பிரம்மன்’, ‘வெத்துவேட்டு’, ‘நிஜமா நிழலா’, ‘பேய் மாமா’, ‘அருவா சண்ட’ ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். சமீபகாலமாக அவரைப் பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துகள் பரப்பப்பட்டு வந்தன. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்த மாளவிகா மேனன், ‘சமூக வலைத்தளங்களில் கண்ணியமற்ற முறையில் யாரைப் பற்றியும், என்ன வேண்டுமென்றாலும் பேசலாம் என்ற உரிமை இருப்பதாக நினைத்துக்கொண்டு சிலர் செயல்பட்டு வருகிறார்கள்.

விழாவுக்கு என்ன டிரெஸ் அணிந்து வரப்போகிறீர்கள் என்று கூட எனக்கு பலர் போன் செய்து விசாரிக்கின்றனர்’ என்று வருத்தத்துடன் கூறியிருந்தார். இந்நிலையில், மாளவிகா மேனன் பற்றி அவதூறாகப் பதிவிட்டதாக, அட்டப்பாடியை சேர்ந்த ஸ்ரீஜித் என்ற வாலிபரை கொச்சி சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags : Malavika Menon ,Thiruvananthapuram ,
× RELATED திருத்தணியில் பரபரப்பு வீட்டின் கதவை...